ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஏஆர் ரகுமானை போல தீயாய் வேலை செய்யும் யுவன் சங்கர் ராஜா.. உங்க அக்கப்போரு தாங்கல!

Ar Rahuman and Yuvan: என்னதான் முன்னணி நடிகர்கள் பல கோடியில் பிரம்மாண்டமாக படத்தில் நடித்தாலும், படம் வெளிவருவதற்கு முன்னாடியே மக்கள் மனதில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் என்றால் அது அந்த படத்தில் உள்ள பாடல்களால் மட்டுமே முடியும். முதலில் அந்தப் படத்தின் பாடலை வைத்து தான் வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் அந்த படத்தை தியேட்டர்களில் போய் பார்க்க வேண்டும் என்ற ஆசையை தூண்டும்.

அந்த அளவிற்கு ஒரு படத்திற்கு மிக உயிரோட்டமாக அமைவது இசை. அப்படிப்பட்ட மியூசிக்கை கொடுத்து நடிகர்களுக்கு இணையாக ரசிகர்கள் மனதில் இடத்தை பிடிப்பது மியூசிக் டைரக்டர். இந்த லிஸ்டில் ஏகப்பட்ட இசையமைப்பாளர்கள் இருந்தாலும் எப்பொழுதுமே ஏஆர் ரகுமான் இசைக்கு ஒரு தனி இடமே உண்டு. கோலிவுட், பாலிவுட் என நாலா பக்கமும் பிசியாக வருபவர்.

அந்த வகையில் பேரையும், புகழையும் நல்லாவே சம்பாதித்து சினிமாவில் இவருக்கு என்று ஒரு முத்திரையை பதித்து விட்டார். அப்படிப்பட்ட இவர் இங்கே இருப்பதைவிட துபாயில் இருப்பது தான் அதிகமாகிவிட்டது. அதற்கு ஏற்ற மாதிரி துபாயில் வீடு மற்றும் ஸ்டூடியோவை வைத்திருக்கிறார். எப்பொழுதெல்லாம் வேலை இருக்கிறதோ அப்பொழுது மட்டுமே இந்தியாவிற்கு வருகிறார்.

Also read: சைக்கோ இயக்குனருடன் இணைந்த ஏஆர் ரகுமான்.. தாக்குப் பிடிப்பாரா, தலைத் தெறிக்க ஓட போகிறாரா?

மற்றபடி முக்கால்வாசி அவர் நேரத்தை செலவிடுவது துபாயில் தான். தற்போது இவரை போலவே தீயா வேலை செய்யணும் குமாரு என்கிற மாதிரி எல்லா பேரையும் புகழையும் சம்பாதித்து விட்டு துபாயில் தஞ்சம் அடைய வேண்டும் என்று நினைக்கிறார் யுவன் சங்கர் ராஜா. அதனால்தான் என்னமோ இந்தப் பக்கம் வராமலேயே துபாயிலேயே ஒவ்வொரு நாட்களையும் கடந்து வருகிறார்.

அந்த வகையில் எல்லாமே ஆன்லைன் ஸ்கைப் தான் என்கிற மாதிரி கமிட்மென்ட் பண்ணி முக்கியமான வேலைகளை டீல் பண்ணி வருகிறார். இதனால் இவரை நேரடியாக பார்த்து பேச முடியாமல் இயக்குனர்கள் ஒவ்வொருவரும் அவஸ்தப்பட்டு வருகிறார்கள். முக்கியமாக இவரை நம்பி படத்தில் கமிட்டான இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ரொம்பவே தத்தளித்து வருகிறார்கள்.

இன்னும் சொல்ல போனால் இவரை பார்த்து பேச வேண்டுமென்றால் இவர் இருக்கும் துபாய் பக்கம்தான் போக வேண்டும் போல, அப்படி இருக்கு தற்போது இயக்குனர்களின் நிலைமை. இப்படி எல்லோருமே இங்க சம்பாதிச்சிட்டு வெளிநாட்டில் போய் சொகுசாக இருக்கணும் என்று நினைத்தால் அனைவரது பாடும் திண்டாட்டமாக மாறிவிடும்.

Also read: 5 இயக்குனர்களின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்த இசையமைப்பாளர்.. செல்வராகவன் படம் என்றாலே யுவன் இல்லாமல் எப்படி

Trending News