1996 ல ரஜினிக்கு தான் மக்கள் செல்வாக்கு ஜாஸ்தி.. நீதான் முதலமைச்சர் என அடித்துக் கூறிய பிரபலம்

Super star Rajinikanth: கர்நாடகாவை பூர்வீகமாகக் கொண்ட சூப்பர் ஸ்டார் ரஜினி அவர்கள், இயக்குனர் கே பாலசந்தர் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தனக்கு இருந்த திறமையின் மூலம் வில்லனாக இருந்தவர் குணச்சித்திர நடிகர், நடிகர் என விரைவில்  புகழின் உச்சிக்கே சென்றார்.

90 காலகட்டத்தில் தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வந்த தலைவருக்கு அரசியல் மீது நாட்டம் வந்தது என்று சொல்லுவதை விட, அரசியலுக்கு தலைவரை பிடித்திருந்தது என்றே சொல்லலாம் அந்த அளவுக்கு அவருக்கு இருந்த மக்கள் செல்வாக்கின் காரணமாக கட்சிகள் பலரும் தங்கள் கட்சியில் அவரை இணைத்துக்கொள்ள போட்டிபோட்டு வரிசை கட்டி நின்றனர்.

ரஜினி அரசியலில் குதிப்பாரா? என்ற அனைத்து பத்திரிகைகளும் ரஜினியை விமர்சித்து வந்த நிலையில் இதற்கு பதில் சொல்லும் விதமாக கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளிவந்த முத்து திரைப்படத்தில் “கட்சி எல்லாம் இப்ப நமக்கு எதுக்கு? காலத்தின் கையில் அது இருக்கு” என்று நைசாக நழுவி விட்டார் தலைவர். ஆனால் தமிழகத்து காவல்துறையினருக்கு தண்ணி காட்டிக் கொண்டிருந்த ஒருவர் மட்டும் இவரின் அரசியல்  வரவை ஆதரித்தார்.

தமிழகத்தில் 90களில் தமிழ்நாடு காவல்துறையினருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியவர் சந்தன கடத்தல் வீரப்பன் அவர்கள். தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா என மூன்று மாநில காவல்துறையும் வீரப்பனை பிடிக்க முடியாமல் திண்டாடி உள்ளனர். தமிழக அரசியல் பற்றி அடிக்கடி வீடியோ எடுத்து  தம்முடைய கருத்தை  மக்களுக்கு தெரிவித்து வந்தார். அதன்படி மக்களுக்கான ஒரு பேட்டியில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை பற்றி  பேசி உள்ளார்.

“எம்ஜிஆர் மாதிரி ஒரு தலைவரை பார்க்க முடியாது” என்று கூறிய சந்தன கடத்தல் வீரப்பன் அவர்கள், ரஜினி ஆட்சிக்கு வந்தால் எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்த மாதிரி என்றார். ரஜினி தனித்து போட்டியிட்டால் மக்களிடம் அதிகமான ஓட்டுகளை வாங்கி முதல்வராவது உறுதி என்று  கூறினார்.  இதுவே அரசியல் கட்சிகளுடன் இணைந்தால் உன்னை செருப்பு மாதிரி பயன்படுத்திவிட்டு கழட்டி விட்டு போய்விடுவார்கள் என்று தலைவரை எச்சரிக்கவும் செய்தார்.

இன்று முன்னணி நடிகர்கள் சிலர் அரசியலில் நுழைவதற்காகவே, திட்டம் போட்டு மாணவர்களுக்கு பரிசுத்தொகை கொடுப்பது, நூலகம்  திறப்பது என மக்கள் இயக்கம் மூலம் மக்கள் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் பல சேவைகளை செயல்படுத்தி வருகின்றனர்.

ஆனால் அன்று 30 வருடங்களுக்கு முன் மக்கள் செல்வாக்கு நிறைந்திருந்த போதும் அரசியல் இல்லாமலே மக்களுக்கு சேவை செய்யலாம் என்று ஒதுங்கி விட்டார். ரஜினியின் மதிப்பு தெரியாத பலரும் அவரை கேலி கிண்டலுக்கு ஆளாக்கி வருகின்றனர். தலைவன் அமைதி காப்பது இயலாமலால் அல்ல. நமக்கு தேவை இல்லை என்பதினால் வந்த அமைதி.