திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிரதீப்புக்கு அடுக்கடுக்காக குவியும் வாய்ப்புகள்.. கையில் 3 படங்களை வைத்திருக்கும் ரொமான்டிக் ஹீரோ

Pradeep Ranganadhan: சினிமாவில் ஹீரோவாக ஜெயிக்க வேண்டும் என்றால் அழகு ரொம்பவே முக்கியம் என்று சொல்லி வந்த நிலையில், திறமை இருந்தால் மட்டுமே போதும் என்று பல நடிகர்கள் நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள். அந்த வகையில் தற்போது பிரதீப் ரங்கநாதனும் சேர்ந்திருக்கிறார். இவர் லவ் டுடே படத்தில் ஹீரோவாக நடித்ததில் இருந்து ஏகப்பட்ட ரசிகர்கள் கிடைத்து விட்டார்கள். முக்கியமாக பெண்கள் மனதை கவர்ந்து இழுத்து இருக்கிறார்.

அந்த வகையில் கோமாளி மற்றும் லவ் டுடே படத்தை இயக்கியதன் மூலம் தற்போது ஹீரோவாகவும் பயணத்தை தொடங்கி விட்டார். இவரை தேடி அடுக்கடுக்காக பட வாய்ப்புகள் குவிந்து கொண்டே வருகிறது. அதனால் லவ் டுடே படத்திற்கு பிறகு தற்போது விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கப் போகிறார்.

இவர்கள் கூட்டணியில் உருவாகப் போகும் படத்தின் டைட்டில் LIC (Love Insurance Corporation) என்று வைத்திருக்கிறார்கள். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் ஆகியோர் தயாரிக்கப் போகிறார்கள். இதில் கீர்த்தி செட்டி, எஸ்ஜே சூர்யா, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் கமிட் ஆகியிருக்கிறார்கள். இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க போகிறார்.

Also read: பிரதீப் ரங்கநாதன் மாதிரி வராதுங்க .. லவ் டுடே ஹிந்தியில் ஹீரோ ஹீரோயின் ரெடி

இப்படத்தின் பட்ஜெட் 60 கோடியில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. மேலும் படப்பிடிப்பு தற்போது துவங்கிய நிலையில் அதற்கடுத்த இவர் நடிக்கப் போகும் இயக்குனரையும் லாக் செய்து விட்டார். அதாவது ஓ மை கடவுலே படத்தை எடுத்த அஸ்வத் மாரிமுத்து இயக்குனருடன் பிரதீப் அவருடைய அடுத்த படத்தை கமிட் பண்ணி இருக்கிறார்.

அடுத்ததாக விக்னேஷ் சிவனுக்கும் பிரதீப்புக்கும் நல்ல ஒரு புரிதல் இருப்பதால் மறுபடியும் பிரதீப்பை வைத்து அடுத்த படத்தையும் விக்னேஷ் சிவன் தான் இயக்கப் போகிறார். அதற்கு காரணம் தற்போது விக்னேஷ் சிவன் மீது பெரிய ஹீரோக்கள் யாரும் நம்பிக்கை வைத்து வராததால், ரொமான்டிக் ஹீரோவாக ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த பிரதீப் வைத்து கேரியரில் ஜெயித்து விடலாம் என்று விக்னேஷ் சிவன் பிளான் பண்ணி விட்டார்.

அதற்கு ஏற்ற மாதிரி பிரதிப்புக்கும் விக்னேஷ் சிவன் மூலம் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது என்பதால் ஹீரோவாக நடிப்பதற்கு முழு முயற்சியுடன் களமிறங்கி விட்டார். ஆக மொத்தத்தில் இவர்களுடைய காம்போவில் தற்போது உருவாகி வரும் LIC படம் எந்த அளவிற்கு கை கொடுக்கப் போகிறது என்பதை வைத்து அடுத்த கட்ட முயற்சியில் இறங்க வாய்ப்பு இருக்கிறது.

Also read: கதையை விட எனக்கு கதாநாயகி தான் முக்கியம்.. பிரதீப் ரங்கநாதனின் அடுத்த தில்லாலங்கடி லவ் லீலைகள்

Trending News