The shooting of Selvaraghavan’s 7G Rainbow Colony has been stopped: செல்வராகவன் இயக்கத்தில் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. முதல் பாகத்தில் நடித்த ஹீரோ ரவி கிருஷ்ணா தான் இரண்டாம் பாகத்திலும் கதாநாயகனாக நடிக்கிறார்.
அதேபோல் தான் முதல் பாகத்தில் இசையமைத்த யுவன் சங்கர் ராஜா தான் இரண்டாம் பாகத்திலும் இசையமைக்கிறார். மேலும் முதல் பாகத்தில் இருந்த சில கேரக்டர்ஸ் அப்படியே இரண்டாம் பாகத்திலும் தொடர்கிறதாம்.
இதன் படப்பிடிப்பு சீக்கிரம் நிறைவடைந்து ரிலீஸ் தேதியும் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், இப்போது 7ஜி ரெயின்போ காலனி 2 படத்தின் படப்பிடிப்பு அதிரடியாக நிறுத்தப்பட்டிருக்கிறது. ஏற்கனவே செல்வராகவன் இயக்கும் படங்கள் எதுவும் சமீப காலமாக எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காததால் நடிகரானார்.
Also Read: 7 படங்களில் வில்லனாக கமிட்டான SJ சூர்யா.. டாப் ஹீரோக்களுக்கு இணையாக பிசியான நடிகவேள்
துட்டு இல்லாமல் நின்னு போன செல்வராகவன் படம்
இப்போது மறுபடியும் இயக்குனராக 7ஜி ரெயின்போ காலனி படத்தை இயக்கிக் கொண்டிருந்த சமயத்தில், அவருக்கு இப்படி ஒரு அடி விழுந்து இருக்கிறது. 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தை 15 கோடியில் முடிக்க பிளான் பண்ணி இருந்தார்.
ஆனால் இதற்கு படத்தின் தயாரிப்பாளர் ஏஎம் ரத்னம் தான் மிகுந்த தயக்கம் காட்டினார். இருப்பினும் இதன் படப்பிடிப்பு 20 நாட்களாக சென்னையில் தீவிரமாக நடைபெற்றது. இந்த சமயத்தில் படத்திற்கு பினான்சியல் பிரச்சினை ஏற்பட்டு ஷூட்டிங் நிறுத்திவிட்டனர்.
செல்வராகவன் இந்த படத்தை 15 கோடிக்கு முடித்துக் கொடுப்பதாக உறுதியளித்ததால், ஏஎம் ரத்னமும் அந்த பணத்தை எப்படியோ ஏற்பாடு செய்து கொடுத்து விட்டார். ஆனால் படத்தின் பட்ஜெட் பிளான் போட்டதை விட எகிறியதால் இப்போது ஷூட்டிங்கை நிறுத்தி இருக்கின்றனர். இதன் பிறகு செல்வராகவன் மற்றும் ஏஎம் ரத்னம் இருவருக்கும் இடையே சுமூகமான தீர்வு கிடைத்தால் மட்டுமே இந்த படத்தின் படப்பிடிப்பு இனி தொடர வாய்ப்பு இருக்கிறது.
Also Read: சுட்டு போட்டாலும் நடிக்கத் தெரியாத செல்வராகவன் பட ஹீரோ.. தங்கத் தட்டில் பிறந்ததால் கிடைத்த வாய்ப்பு