ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஜெயலலிதாவை எதிர்த்து பேச முடியாமல் எடுத்த 5 படங்கள்.. என் வழி, தனி வழி!

Punch dialogue against Jayalalithaa: சூப்பர் ஸ்டார் ரஜினியின் வீடு மற்றும் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமும் போயஸ் கார்டனில் தான் இருந்தது. அந்த சமயத்தில் போலீசார் ரஜினியை வெளியில் செல்லும்போதெல்லாம் தடுத்து நிறுத்தி கடுப்பேற்றி விட்டனர். ஜெயலலிதாவின் வீடு இருந்த சாலையின் வழியா யாருமே செல்லக்கூடாது, ரோட்டில் பார்க்கிங் செய்யக்கூடாது என்று ஒவ்வொரு முறையும் சூப்பர் ஸ்டாரை சூடேற்றினர். ஒரு நாள் ரஜினி நடுனோடு என்று கூட பார்க்காமல் அருகில் இருந்த ஒரு பெஞ்சை போட்டு அதில் அப்படியே உட்கார்ந்து விட்டார்.

போலீஸ் அதிகாரிகளும் பயந்து கெஞ்சினார்கள். பல மணி நேரம் ஆகியும் போராட்டம் செய்வது போல் அங்கேயே உட்கார்ந்து விட்டார். அந்த சமயத்தில் ரசிகர்களும் கூடி விட்டதால், சூப்பர் ஸ்டாருக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்து விடும் என பாதுகாப்பில் இருந்த போலீசார் சமாதானம் செய்ய முன் வந்தனர். இதெல்லாம் ஜெயலலிதாவின் தூண்டுதலின் பெயரில்தான் பாதுகாப்பு அதிகாரிகள் குடைச்சல் கொடுத்ததாக ரஜினிக்கு ஜெயலலிதாவின் மீது கோபம் இருந்தது. ஆனாலும் அதை மூஞ்சிக்கு நேரா காட்ட முடியாமல் அவருடைய படங்களின் மூலம் எதிர்த்து பேசினார். தலைவருக்கு தன்னுடைய ஸ்டைல் பெரும்பலம். அவருடைய ஐந்து படங்களில் போட்ட பஞ்ச் டயலாக் ஜெயலலிதாவின் மீது அவர் எவ்வளவு காண்டுல இருந்துள்ளார் என்பது ரசிகர்களுக்கும் புரிந்து விட்டது.

மாப்பிள்ளை: ‘அத்த, நீங்க தமிழ் நாட்டுக்கே ராணி மாதிரி… நான் தமிழ் நாட்டுக்கே. எதுக்கு விடுங்க, எல்லாருக்கும் தெரியும்’ என்று மாப்பிள்ளை படத்தில் ரஜினி அரசியல் பஞ்ச் பேசி இருந்தார். இதை ஜெயலலிதாவை மனதில் வைத்து தான் சூப்பர் ஸ்டார் பேசியது ஊரறிந்தது.

மன்னன்: ‘நான் பெண்ண மதிப்பேன், தல வணங்குவேன்.. ஆனா உங்கள மாதிரி மதம் பிடிச்ச பெண்ணை பாத்தா என்ன விட்டிருங்க.. என் தல முடி கூட ஆடாது’ என்று மன்னன் படத்தில் சூடு பறக்க சூப்பர் ஸ்டார் பஞ்ச் பேசி அசால்ட் காட்டினார். இது ஜெயலலிதாவிற்காகவே சொல்லப்பட்ட டயலாக்.

Also Read: 2023 இல் கெட்ட பேர் வாங்கிய 5 இயக்குனர்கள்.. சந்திரமுகியை ஏமாற்றிய வாசு

அண்ணாமலை: சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் ரஜினி, குஷ்பூ நடிப்பில் சூப்பர் ஹிட் அடித்த படம் தான் அண்ணாமலை இந்த படத்தில் ரஜினி பணம் காசுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், நண்பருக்காக எந்த அளவுக்கு வேணாலும் இறங்கி செய்ய கூடிய பால்காரராக நடித்தார். ஒரு கட்டத்தில் நண்பன் ஏமாற்றும் போது, ஏமாளியாக இல்லாமல்ல் அவருக்கு மேலே உயர்ந்து நின்றார். இந்த படத்தில் இவர் பேசிய பஞ்ச் டயலாக்கு பல அர்த்தம் இருக்கு. அதிலும் குறிப்பாக ரஜினியை சுரண்டிப் பார்த்த ஜெயலலிதாவிற்காகவே ‘நான் சொல்றதையும் செய்வேன், சொல்லாததையும் செய்வேன்’, ‘மல. அண்ணா மல’ என்று பஞ்ச் பேசி மிரட்டிவிட்டார்.

முத்து: ரஜினி- மீனா காம்போவில் வெளியான முத்து படம் என்றும் சூப்பர் ஸ்டார் ரசிகர்களின் ஃபேவரிட் படங்களின் லிஸ்டில் இருக்கிறது. இந்திய அளவில் மட்டுமல்ல ஜப்பானிலும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதனால் சமீபத்தில் கூட இந்த படத்தை ரீ ரிலீஸ் செய்தனர். இதில் ரஜினி, அரசியல் பலம் அதிகம் இருந்ததால் ஆட்டம் காட்டிய ஜெயலலிதாவிற்காகவே ‘நான் எப்ப வருவேன், எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது, ஆனா வரவேண்டிய நேரத்தில் கரெக்டா வருவேன்’ என்று பஞ்சு பேசி தெறிக்க விட்டார். இந்த படத்தில் ரஜினிக்கும் அரசியலில் வரும் ஆர்வம் இருக்கிறது என்பதை வெளிப்படுத்தினார். ரஜினி அரசியலில் வந்தால் உங்க நிலைமை எல்லாம் என்ன ஆகும்! என்று ரசிகர்களும் இந்த டயலாக்கை வைத்து கெத்து காட்டினார்கள்.

படையப்பா: சூப்பர் ஸ்டார் ரஜினி இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுத்த படையப்பா படத்தில் ‘என் வழி தனி வழி’, ‘அதிகமா ஆசைப்படுற ஆம்பளையும், அதிகமாக கோபப்படுற பொம்பளையும் நல்லா வாழ்ந்ததா சரித்திரமே இல்ல’ என்ற டயலாக்குகளை பேசும் போது ரஜினி அவ்வளவு ஆக்ரோசத்தோடு பேசினார். அந்த சமயத்தில் தான் ரஜினி ஜெயலலிதா இருவருக்கும் பனிப்போரே நிலவியது. நான் உண்டு என் வேலை உண்டு என்று இருக்கிறேன், என் வழியில குறுக்க வந்தா கைமா தான் என்று ரஜினி மறைமுகமாக வார்னிங் கொடுத்தார்.

Also Read: 2024ல் ஏப்ரல் வரை ரிலீஸ் ஆக உள்ள 13 டாப் பட்ஜெட் படங்கள்.. அதிக வசூலை அள்ள போகும் படம் இதுதான்

Trending News