சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.. கோஸ்ட் உடன் மோத போகும் யோகிபாபுவின் குய்கோ

This Week OTT Release Movies: என்னதான் நமக்கு பிடித்த படங்களை தியேட்டரில் பார்த்தாலும் ஓடிடியில் அது எப்போது வெளியாகும் என காத்திருக்கும் ரசிகர்களும் உண்டு. இப்படி ஒரு வகை இருந்தாலும் மற்றொரு வகை ஓடிடியில் படங்களை பார்ப்பதை மட்டுமே கொள்கையாக வைத்திருப்பார்கள்.

அதிலும் சில படங்கள் தியேட்டரை காட்டிலும் ஓடிடியில் வரவேற்பு பெற்ற சரித்திரமும் உண்டு. அந்த வகையில் இந்த வாரம் ஓடிடி தளங்களை அலங்கரிக்க இருக்கும் 5 படங்களை பற்றி இங்கு காண்போம். அதில் இந்த வாரம் பெரிய அளவில் தமிழ் படங்கள் எதுவும் வெளியாகவில்லை.

அந்த வரிசையில் விதார்த், யோகி பாபு நடிப்பில் நவம்பர் 24 அன்று வெளியான குய்கோ நாளை நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அது மட்டுமல்லாமல் கேலக்ஸி சம்பந்தப்பட்ட கதையான ரெபெல் மூன் முதல் பாகமும் நாளை நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

Also read: 2023-ல் ஓடிடி-யில் அதிகம் பார்க்கப்பட்ட 5 படங்கள்.. 2.5 கோடி பார்வையாளர்களைக் கவர்ந்த அஜித்

மேலும் பஞ்சா வைஷ்ணவ தேஜ், ஸ்ரீலீலா நடிப்பில் கடந்த மாதம் வெளியான ஆதிகேசவா படமும் நாளை நெட் ஃபிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. அதைத்தொடர்ந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பார்த்த பார்பியும் நாளை ஜியோ சினிமா ஓடிடியில் வெளியாகிறது.

இத்துடன் சிவராஜ்குமார், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான கோஸ்ட் என்ற ஆக்சன் த்ரில்லர் படமும் நாளை ஆஹா தமிழ் ஓடிடியில் வெளியாகிறது. இந்த படங்களுடன் சில ஹாலிவுட் மற்றும் வெப் சீரிஸ்களும் வெளிவர இருக்கிறது.

ஆனால் மிகவும் எதிர்பார்க்கப்படும் இந்த ஐந்து படங்களுக்குத்தான் இப்போது கடும் போட்டி நிலவி வருகிறது. அந்த வகையில் கோஸ்ட் படத்தை தான் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். அந்த வகையில் சிவராஜ்குமார் உடன் மோதும் யோகி பாபுவின் குய்கோ ஓடிடியில் கவனம் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Also read: OTT ஹீரோக்கள் என முத்திரை குத்தப்பட்ட 6 நடிகர்கள்.. ஒரு வழியா தளபதி 68ல் இணைந்த அஜ்மல்

Trending News