புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கமுக்கமாக விடாமுயற்சி கதையை தூக்கி நிறுத்தும் மகிழ் திருமேனி.. இது வெங்கட் பிரபுவுக்கு சுட்டு போட்டாலும் வராது

Ajith in Vidamuyarchi: சினிமாவில் கொஞ்சம் பிரபலம் ஆகி விட்டாலே ஓவர் அலப்பறைகளை பண்ணி வானத்துக்கும் பூமிக்கும் குதித்து சோசியல் மீடியாவை இரண்டாக்கி விடுவார்கள். இவர்களுக்கெல்லாம் மத்தியில் அஜித் எப்பொழுதுமே நடிப்பது என்னுடைய வேலை. அதை மட்டும் தான் நான் செய்ய விரும்புகிறேன் என்று சொல்லி எதைப் பற்றியும் கண்டுக்காமல், இருக்கும் இடம் தெரியாமல் நடித்துவிட்டு போய்விடுவார்.

இவர் தான் இப்படி என்று பார்த்தால், விடாமுயற்சி படக்குழுவில் உள்ள அனைவருமே என்ன பண்ணுகிறார்கள் என்று தெரியாத அளவிற்கு படப்பிடிப்பு கமுக்கமாக போய்க் கொண்டிருக்கிறது. அவ்வப்போது அவர்கள் போயிட்டு வரும் விமானத்தை வைத்து இந்த இடத்தில் படப்பிடிப்பு நடக்கிறது என்று தெரிந்து கொள்ளும்படி தான் இருக்கிறது.

அதன்படி அஜித் விடாமுயற்சி படத்திற்கான முதல் கட்ட சூட்டிங்கை முடித்துவிட்டு, மெடிக்கல் செக்கப்காக துபாய் சென்றிருக்கிறார். அதே மாதிரி திரிஷாவும் சென்னை திரும்பி இருக்கிறார். இதனை அடுத்து சில நாட்கள் ஓய்வெடுத்தபின் மீண்டும் படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொள்வார்கள். அந்த வகையில் விடாமுயற்சி கதை வெளியே லீக்காகாமல் கண்ணும் காதுமாய் வைத்து படப்பிடிப்பை நடத்தி வருகிறார் மகிழ்திருமேனி.

Also read: படத்தில் சொந்த காரை பயன்படுத்திய 5 நடிகர்கள்.. ஸ்விஃப்ட் காரில் வெங்கட் பிரபுவை அலறவிட்ட அஜித்

இதில் யார் யாரெல்லாம் நடிக்கிறார்கள், அவர்களுக்கு என்ன கதாபாத்திரம், த்ரிஷா ஹீரோயினாக கமிட் ஆகிய நிலையிலும் அவரைப் பற்றி எந்தவித அப்டேட்டுகளும் வெளியே வராமல் பாதுகாத்து வருகிறார்கள். அத்துடன் அஜித்தின் கதாபாத்திரங்கள் பற்றியும் எந்த செய்திகளும் வெளிவரவில்லை. இவர்களுடன் சேர்ந்து மகிழ்திருமேனியும் எந்தவித பேட்டியும் கொடுக்காமல் சைலண்டாகவே கதையை கொண்டு வருகிறார்.

இப்படி எல்லாம் பார்க்கும் பொழுது இதுவரை எந்த ஒரு பெரிய ஹீரோ படத்தையும் இந்த அளவிற்கு அப்டேட்டுகளை வெளியே விடாமல் கமுக்கமாக கொண்டு கொண்டு வந்ததே இல்லை. இதற்கு என்ன காரணம் என்றால் ஏதாவது ஒரு சின்ன அப்டேட்டுகளை வெளியிட்டால் ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்ப்பை வைத்து விடுவார்கள்.

அதனால் விடாமுயற்சி படத்தை பார்க்க வரும் வரை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கேஷுவலாக படத்தை பார்த்துட்டு போற மாதிரி இருக்க வேண்டும் என்று அஜித் போட்ட கட்டளையின்படி தான் மகிழ்திருமேனி ஒவ்வொரு ஸ்டெப்பையும் எடுத்து வைக்கிறார். இதையெல்லாம் பார்க்கும் பொழுது தளபதி 68 படத்தை சீக்ரெட் ஆக கொண்டு வர வேண்டும் என்று நினைக்கும் வெங்கட் பிரபு, மகிழ் திருமேனிடமிருந்து இந்த விஷயத்தை கத்துக்க வேண்டும்.

Also read: அதிகாரப்பூர்வமாக அஜித் இயக்குனரை கழட்டிவிட்ட கமல்.. மீண்டும் கார்த்திக்கிடம் தஞ்சம்

Trending News