கதைக் கேட்காமல் ஓகே சொல்லிய விஜய்! இயக்குனரை பங்கமாய் கல்லாய்த்த தயாரிப்பாளர்

Vijay 68 update: மாநாடு வெற்றிக்கு பின் மீண்டும் ஒரு டைம் ட்ராவல் படமாக இயக்கவிருக்கிறார் வெங்கட் பிரபு. லியோவில் விஜய்யின் வெறித்தனத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து இருப்பது விஜய் 68. விஜய், வெங்கட் பிரபுவின் கூட்டணியில் ஆக்சன், த்ரில்லர், சயின்ஸ் பிக்சன்,  டைம் டிராவல் என பல கலவைகளின் ஈகுவேஷனாக வரப்போகிறது விஜய் 68.

இப்போது உள்ள நடைமுறையில் ஒவ்வொரு இயக்குனரும் படத்தை வெற்றி பெற வைக்க வேண்டும் என்ற வியாபார நோக்கில் பல அப்டேட்களை கொடுத்து ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகின்றனர். ஆனால் வெங்கட் பிரபுவோ  பல சஸ்பென்ஸ்களை மறைத்து வைத்து மௌனம் காத்து வருகிறார்.

வெங்கட் பிரபுவின் இந்த நடவடிக்கைக்கு இவர் அஜித் இயக்குனர், அஜித் என்றால் சிறப்பாக செய்வார் இந்த படத்தில் விஜய்க்கு என்ன செய்யப் போகிறாரோ என்று பலவாறு தீயை கொளுத்தி போட்டு வருகின்றனர்.  இதை சற்றும் கண்டு கொள்ளாமல்  விஜய் 68  தனது திறமையால் மெருகேற்றி வருகிறார் வெங்கட் பிரபு.

Also Read: 2024-ல் 1000 கோடி உறுதியா அடிக்க காத்திருக்கும் 5 படங்கள்.. ஜெயிலருக்கு டஃப் கொடுக்க வரும் ரெண்டு ஹீரோஸ்

பீஸ்ட், லியோ என ஆக்சன் திரில்லருக்கு பின் வெங்கட் பிரபுவின் மேலிருக்கும் நம்பிக்கையில் ஜாலியாக படம் பண்ண வேண்டும் என்று கதை கேட்காமலேயே ஓகே சொன்னார் விஜய். தளபதி உடன் பிரபுதேவா, பிரசாந்த், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி, ஜெயராம் மோகன் என முன்னணி நட்சத்திரங்கள் பலர் நடிக்க உள்ளனர். இப்படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.

ஹாலிவுட் படமான லூப்பர் என்கிற டைம் டிராவல் படத்தின் கதையை கருவாக கொண்டு உருவாக்கபடுவதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கொஞ்சம் குறைவாகவே உள்ளது. இப்படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாதியோ வெங்கட் பிரபுவின் பிறந்தநாளுக்கு ஒரு பைத்தியக்கார மேதை என்று கலாய்த்து இருந்தார். இதை பார்த்த ரசிகர்கள் இவரிடம் போய் விஜய் சிக்கிக் கொண்டாரோ என்று பரிதவித்தனர்.

மேலும் இப்படத்திற்காக  டிஜிட்டல் டிஏஜி கான்செப்ட் என்ற நவீன தொழில்நுட்பத்துடன்  விஜய்யின் தோற்றத்தை மாற்றப் போகிறார் இயக்குனர். இதற்கு முன் விஜய்யின் இயக்குனர்கள் பலரும் மலையை தாங்குவது போல் அழுத்தத்துடன் இருந்திருக்க வெங்கட் பிரபுவோ சீரியஸ் ஆக இல்லாமல் ஷூட்டிங்கிலும் எப்போதும் விளையாட்டாகவே இருப்பதால் விஜய்யின் ரசிகர்கள் கொஞ்சம் பீதியில் தான் உள்ளனர். தளபதியின் வெற்றி பெற வேண்டுமே!

Also Read : தளபதி 68-ல் மறுபடியும் ஒரு ஹீரோயினை களம் இறக்கிய வெங்கட் பிரபு.. இவானாவிற்கு பதிலாக வரும் அமுல் பேபி