Super star Rajinikanth helps for Tuticorin flood relief: இந்த வருடம் வடகிழக்கு பருவ மழை கணக்கில்லாமல் பெய்து பலரின் மனதையும் வாழ்வையும் கனக்கச் செய்தது. பெருமழை வெள்ளத்தால் தமிழக மக்கள் செய்வதறியாது திக்கு திசையற்று திண்டாடிய வேளையில் பிரபலங்கள் பலரும் தனது பங்குக்கு கை கொடுத்து தமிழக மக்களை கைதூக்கி விட்டனர்.
அந்த வகையில் சமீபத்தில் தென் மாவட்டங்களில் பெய்த கன மழையால் உடமைகளை இழந்து உறவுகளை இழந்து தவித்து வருகின்றனர். சென்னையில் மழை பெய்தால் மட்டுமே பிரபலங்கள் களத்தில் இறங்குவார்கள் மற்றவர்களை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார்கள் என்பதனை பொய்யாக்கும் விதமாக மாரி செல்வராஜ், உதயநிதி என பலரும் தென் மாவட்டங்களை திரும்பி பார்த்து உள்ளனர்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் “என் ஒரு துளி வியர்வைக்கு ஒரு பவுன் தங்க காசு கொடுத்தது தமிழ் அல்லவா! என் உடல் பொருள் ஆவியை தமிழுக்கும் தமிழர்க்கும் கொடுப்பது முறையல்லவா!” என்ற கூற்றை மெய்ப்பிக்கும் விதமாக களத்தில் இறங்கி உள்ளார் தலைவர்.
Also Read: என்னால் இப்போ அதை செய்ய முடியலையே.. மன உளைச்சலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
ரஜினிகாந்த் பவுண்டேஷன் மற்றும் அகில இந்திய தலைமை ரஜினிகாந்த நற்பணி மன்றத்தின் வாயிலாக பல லட்சம் மதிப்பிலான பொருட்களை 50க்கும் மேற்பட்ட வாகனங்களின் மூலம் தென் மாவட்டங்களுக்கு அனுப்பி வைத்துள்ளார் தலைவர்.
ஒவ்வொரு வாகனங்களும் தென் மாவட்டங்களில் இடவாரியாக பிரிக்கப்பட்டு வெள்ள நிவாரண பணிகளை மேற்கொள்ள தயாராகி உள்ளது. தென் மாவட்டங்களுக்காக மட்டும் தலைவர் 50 லட்சம் கொடுத்து உள்ளார். இவர் 50 லட்சம் என்ன, ஐந்து கோடி கொடுத்தாலும் இவரின் நல்ல உள்ளத்தை ஏற்காத அரசியல் விரோதிகள், காழ்ப்புணர்வாளர்கள் சிலர், இவர் தமிழகத்திற்கு என்ன செய்தார்? என்று புறம் கூறி வருகின்றனர்.
தானும் நல்லது செய்யாமல் நல்லது செய்பவரையும் விடாமல் தமிழகத்தை முன்னேற விடாமல் தடுக்கும் முட்டுக்கட்டைகளை சட்டை செய்யாமல் தமிழக மக்களுக்கு தோள் கொடுத்து உதவிய இந்த தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. குருன்னு சொல்ற சிஷ்யணுங்கள் பலரும் சுய விளம்பரத்துடன் நிவாரண பொருட்களின் மேல் ஸ்டிக்கர் ஒட்டும் நேரத்தில் அதிக பொருட்ச அளவில் நிவாரண பொருட்களை பகுதிவாரியாக அனுப்பி வைத்தார் தலைவர்
Also Read: அஜித்துக்கு எதிராக நடக்கும் சூழ்ச்சி.. பலிகிடா ஆகும் ரஜினி, சூர்யா விசுவாசிகள்