சலாருக்குப்பின் தமிழில் களமிறங்கும் பிரசாந்த் நில்.. எந்த நடிகருனு கேட்டா ஆடிப் போயிடுவீங்க!

Director Prasanth Neel will do film for tamil cinema hero: பணம் சம்பாதிக்க தான் சினிமாவுக்கு வந்தேன். அதுக்கு அப்புறம் தான் கலை என்று துணிச்சலாக கூறி தான் எடுத்த படத்தை இந்தியா மட்டுமல்லாமல் உலக அளவில் பேச வைத்த கன்னட இயக்குனர் தான் பிரசாந்த் நீல்.

பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் 2018 ல் வெளிவந்த கேஜிஎப் கன்னட சினிமாவை மட்டுமல்லாது இந்தியா சினிமாவையே வாயடைக்க வைத்தது. அந்த அளவுக்கு சிறப்பான திரை கதையுடன் கேஜிஎபில் புகுந்து விளையாடி இருந்தார் பிரசாந்து நில். இதன் வெற்றியை தொடர்ந்து கே ஜி எஃப் இரண்டாம் பாகம் பிரம்மாண்ட உருவாக்கத்தில் எடுக்கப்பட்டு வசூலிலும் ஆயிரம் கோடியை கடந்து சாதனை செய்தது.

தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றி அளித்த பிரசாந்த் நீல் அடுத்ததாக  முன்னணி நடிகர்களான பிரபாஸ் மற்றும் பிருத்திவிராஜின் கூட்டணியில் மீண்டும் ஹோம் பாலே பிலிம்ஸ்காக சலார் இயக்க இருந்த வேளையில் தமிழின் முன்னணி நடிகர் பிரசாந்த் நீலை தொடர்பு கொண்டார்

Also Read: 1000 கோடி வசூலுக்கு போட்ட அஸ்திவாரம்.. வெறிகொண்டு கே ஜி எஃப் கூட்டணி ஆடும் பேயாட்டம்

போன் கால் வந்த மாத்திரத்திலேயே குஷியான பிரசாந்த் நீலை கே ஜி எஃப் 1 மற்றும் கே ஜி எஃப் 2 காக வாழ்த்து தெரிவித்த கையோடு நாம் இணைந்து படம் பண்ணலாமா என்று இன்ப அதிர்ச்சி அளித்துள்ளார். அந்த நடிகர் வேறு யாருமல்ல தன்னலமற்ற தன்மான சிங்கம் அஜித் அவர்கள் தான்.

இதனை சற்றும் எதிர்பாக்காத பிரசாந்த் மகிழ்ச்சியுடன் அஜித்திற்கு ஓகே சொல்லி உள்ளாராம். மேலும் சலார் படம் தொடங்கி விட்டதனால் அஜித்தை சலார் முடியும் வரை பொறுத்திருக்க சொன்னாராம். அஜித், விடாமுயற்சி மற்றும் அடுத்தடுத்து  ஆதிக், வெற்றிமாறன்  என வரிசையாக இயக்குனர்களுடன் கமிட்டாக  இவர் கேஜிஎப் 3க்கு பின் அஜித்துடன் இணைவதாக கூறியுள்ளார்.

யாரும் எதிர்பார்க்காத வகையில்  சைலன்டாக வெற்றி இயக்குனர்களின் கூட்டணியில் ரெடியாகி வருகிறார் ஒரு கேங்ஸ்டர். இயக்குனர் பிரசாந்த் நீல் என்பதால் இயக்குனருடன் இணையும் அஜித்தின் படம் கண்டிப்பாக ஒரு பான் இந்தியா மூவியாக இந்திய சினிமாவை தெறிக்க விடும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

Also Read: சன் பிக்சர்ஸ் கிட்ட மாட்டாத 5 ஹீரோக்கள்.. எவ்வளவு டார்கெட் பண்ணாலும் சிக்காத அஜித்