செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

போண்டா மணி காமெடியில் கலக்கிய 5 படங்கள்.. மாப்பிள்ளையை ஜோக்கர் ஆக்கிய வடிவேலு

Bonda Mani: தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 270 படங்களுக்கு மேல் காமெடி நடிகராக நடித்து பிரபலமானவர் தான் போண்டாமணி. முக்கியமாக வடிவேலு மற்றும் விவேக் உடன் நடித்த காமெடி காட்சிகள் மூலம் அனைவரது கவனத்தையும் பெற்றார். அப்படிப்பட்ட இவர் காமெடியில் கலக்கிய ஆறு படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

சுந்தரா டிராவல்ஸ் : இயக்குனர் அசோகன் இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு முரளி, வடிவேலு நடிப்பில் நகைச்சுவை படமாக வெளிவந்த படம் சுந்தரா டிராவல்ஸ். இதில் ஒரு பஸ்ஸை வைத்து முழு காமெடியும் படமாக எடுக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் காமெடி நடிகர் போண்டாமணி ஒரு மாப்பிள்ளை வேஷத்தில் இருக்கும் பொழுது அவரை அழைத்து போவதற்காக முரளி மற்றும் வடிவேலு போயிருப்பார்கள். அப்பொழுது இவரை ரெடி பண்ணுவதற்காக முரளி மற்றும் வடிவேலு சேர்ந்து செய்யும் அலப்பறை ரொம்பவே ரசிக்கும் படியாக இருக்கும். முக்கியமாக மாப்பிள்ளைக்கு மூக்கிலிருந்து சளி மாதிரி மீசை ஒழுகுது காமெடி அல்டிமேட் ஆக இருக்கும்.

கண்ணும் கண்ணும்: மாரிமுத்து இயக்கத்தில் 2008 ஆம் ஆண்டு பிரசன்னா, வடிவேலு நடிப்பில் வெளிவந்த படம் கண்ணும் கண்ணும். இதில் போண்டாமணி ஒரு முக்கியமான காமெடி காட்சியில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று இருப்பார். அதாவது போண்டாமணியை போலீசார் துரத்திக் கொண்டு வரும் பொழுது, அந்த நேரத்தில் வடிவேலுவை மாட்டிவிடும் விதமாக போலீஸ் அடிச்சு கூட கேட்பாங்க எதையும் சொல்லிவிடாதே என்று சொல்லிவிட்டு ஓடிவிடுவார். இதனால் போலீசார் வடிவேலுவை பார்த்து அவர் என்ன சொன்னார் என்று கேட்ட பொழுது வடிவேல் திரும்பத் திரும்ப இதை சொல்லி அடி வாங்கும் காட்சிகள் ரசிக்கும் படியாக இருக்கும்.

Also read: அவன் ஊரை காப்பாத்த அவன் தானங்க போவான்.. இயக்குனரை தாங்கி பிடித்த வடிவேலு

இங்கிலீஷ்காரன்: சக்தி சிதம்பரம் இயக்கத்தில் சத்யராஜ், நமீதா, வடிவேலு நடிப்பில் வெளிவந்த இங்கிலீஷ்காரன் படத்தில் போண்டாமணி நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அதாவது வடிவேலுக்கு இப்படத்தில் தீப்பொறி திருமுருகன் என்கிற பெயரில் பல லொள்ளுகளை பண்ணி இருப்பார். அந்த வகையில் இவருடைய நண்பராக போண்டாமணி இணைந்து நமிதா திருமணத்தை நிறுத்துவதற்கு கூடவே இருந்திருப்பார். அதிலும் கல்யாணத்தை நிறுத்துவதற்காக மாப்பிள்ளை சீப்பை எடுத்து வந்து பாஸ் இதை ஒளித்து வைத்த கல்யாணம் நடக்காது என்கிற காமெடியை சொல்லி கைத்தட்டல்களை வாங்கி இருப்பார்.

படிக்காதவன்: சூரஜ் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு படிக்காதவன் திரைப்படம் வெளிவந்தது. இதில் தனுஷ், தமன்னா விவேக் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இதில் தனுசுக்காக தமன்னாவை தேடி வரும் விவேக்குக்கு முன்னாடியே மாறு வேஷத்தில் போண்டாமணி மற்றும் செல்முருகன் வந்திருப்பார்கள். ஆனாலும் இவர்கள் வைத்திருக்கும் மறுவை வைத்து விவேக் அடையாளம் கண்டுபிடித்து இருப்பார்.

ABCD: சரவணன் சுப்பையா இயக்கத்தில் ஷியாம், சினேகா, வடிவேலு நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ABCD. இதில் வடிவேலு பஸ் கண்டக்டராக இருப்பார். அப்பொழுது பஸ்ஸில் சீட்டை பிடிப்பதற்காக போண்டாமணி அவர் வைத்திருக்கும் பாம்பை விட்டு சீட்டுக்கு இடம் போட்டு ரகளை பண்ணியிருக்கிறார்.

Also read: அஜித்துடன் சண்டை முத்தியதால் இப்ப வர ஒன்று சேராத 4 பிரபலங்கள்.. 21 வருடங்களாக ஓடாத வடிவேலு

Trending News