Ethirneechal Kaniha: பைவ் ஸ்டார் படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகி தொடர்ந்து ஒரு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பைப் பெற்றவர் தான் நடிகை கனிகா. தொடர்ந்து ஆட்டோகிராப், வரலாறு, எதிரி போன்ற படங்களில் நடித்து வந்த இவர் அடுத்தடுத்து முக்கியமான கதாபாத்திரம் எதுவும் சரியாக அமையாததால் நடிப்பை விட டப்பிங் வாய்ஸில் அதிக ஆர்வம் காட்டி பல முன்னணி நடிகைகளுக்கு குரல் கொடுத்து வந்தார்.
அதன் பின் எதிர்நீச்சல் சீரியலிலும் குணசேகரின் மனைவி ஈஸ்வரியாக அனைத்து ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்து விட்டார். இந்த நாடகம் கடந்த இரண்டு வருடங்களாக டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தை பிடித்து மக்கள் மனதில் சிம்ம சொப்பனமாக உயரத்திற்கு போயிருந்தது. அத்துடன் அடிமையாக இருக்கும் இவருடைய கேரக்டர் தற்போது துணிச்சலாக காட்டி வருவதால் நாலா பக்கமும் இவருடைய மவுசு கூடிவிட்டது.
இதற்கு இடையில் அவ்வப்போது இவருடைய வீடியோக்கள் மட்டும் போட்டோக்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார் . முக்கியமாக சீரியலில் இவருடைய எளிமையான முகபாவனையையும், ஒரு மருமகளாக இருக்கும் தனித்துவத்தை காட்டும் விதமாக எப்பொழுதுமே சேலையை கட்டிக் கொண்டு வருவார்.
ஆனால் சோசியல் மீடியாவில் மாடர்ன் டிரஸ், ஸ்விம்மிங் டிரஸ் போட்டுக்கிட்டு சமூக வலைதளங்களில் எப்போதுமே ஆக்டிவாக வருவார். அப்படிப்பட்ட இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் இவருடைய அம்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு எந்த அளவிற்கு மன உளைச்சலை அடைந்தார் என்ற சோகத்தையும் வெளிப்படுத்தி இருந்தார்.
இதனை அடுத்து தற்போது இவர் இலங்கைக்கு சுற்று பயணத்திற்காக சென்றிருக்கிறார். அங்கே ஆட்டோ ஓட்டும் வீடியோவை பதிவிட்டு இருக்கிறார். அத்துடன் எனக்கு நடிப்பையும் தாண்டி கைவசம் ஒரு தொழில் இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டும் விதமாக ஆட்டோ ஓட்டுவது கொஞ்சம் மன திருப்தியை கொடுக்கிறது என்ற விஷயத்தை முன் வைத்திருக்கிறார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
