ஏடாகூடமான மாத்திரையால் வந்த விளைவு.. தொகுப்பாளினியின் உயிரை காப்பாற்றிய டாக்டர் நடிகை

டாப் ஹீரோக்களின் பட விழாக்கள் என்றாலே இந்த தொகுப்பாளினி தான் நம்பர் ஒன் சாய்ஸ் ஆக இருப்பார். தனக்கென ஒரு ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் இவர் இப்போது நடிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

ஆனால் சமீப காலமாக இவர் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்கிறார். இதற்கு உடல் நல பிரச்சனை காரணமாக சொல்லப்பட்டாலும் பின்னணியில் இருக்கும் கதையே வேறு என்கிறது திரையுலக வட்டாரம். அதாவது இந்த தொகுப்பாளினி இப்போது இரண்டாவதாக ரகசிய திருமணம் செய்து விட்டாராம்.

ஏற்கனவே முதல் திருமணம் விவாகரத்தில் முடிந்ததற்கு அம்மணியின் நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறப்பட்டது. அதனாலேயே தற்போது அவர் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக வைத்திருக்கிறாராம். ஏனென்றால் தொகுப்பாளினி இப்போதும் தன்னுடைய நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளவில்லையாம்.

தன் இஷ்டம் போல் என்ஜாய் செய்து வரும் இவர் சமீபத்தில் விவகாரமான ஒரு மாத்திரையை சாப்பிட்டு மயங்கி விழுந்த கதையும் பகீர் கிளப்பி இருக்கிறது. அதாவது இவர் பிரபல நடிகர் ஒருவருடன் சொகுசு விடுதிக்கு சென்று இருக்கிறார்.

அங்கு அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு அந்தரங்க தேவைக்காக ஏடாகூடமான மாத்திரை ஒன்றையும் விழுங்கி இருக்கிறார். அது அவருக்கு ஒத்துக்கொள்ளாமல் போகவே திடீரென மயங்கி விழுந்து நடிகருக்கு ஷாக் கொடுத்திருக்கிறார்.

உடனே பதறிப் போன அந்த நடிகரும் பிரபல டாக்டர் நடிகை ஒருவரை தொடர்பு கொண்டு இருக்கிறார். அதைத்தொடர்ந்து தொகுப்பாளினி ரகசியமாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாராம். இந்த விவகாரம் தான் இப்போது கோடம்பாக்கம் வட்டாரத்தில் நமுட்டு சிரிப்புடன் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.