Tragedy to happen to Vijay: சினிமாவை தொடர்ந்து இப்போது அரசியலிலும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கும் விஜய், வருகிற 2026 ஆம் ஆண்டு நடக்கப் போற சட்டப்பேரவை தேர்தலில் களம் காண போகிறார். அதற்காக இப்போது தன்னுடைய ரசிகர் மன்றத்தின் மூலமாக தீவிரமாக செயல்படுகிறார்.
இந்த சமயத்துல சாவு வீட்ல விஜய் அசிங்கப்பட்டதால் அவருடைய ரசிகர்கள் கொந்தளிக்கின்றனர். சமீபத்தில் மறைந்த கேப்டன் விஜயகாந்தின் இறப்பு நிகழ்ச்சியில் கண்ணீருடன் விஜய் வந்து அஞ்சலி செலுத்தினார். ஆனால் கேப்டன் உடம்பு சரி இல்லாத சமயத்துல, ஒரு முறை கூட வந்து பாக்காத தளபதி, இறந்த பின்பு ரொம்ப நேரம் கழிச்சு வந்ததால், ‘அவரை வெளியே போ’ என்று அவர பாத்து கோஷம் போட்டனர்.
அதுமட்டுமல்ல செருப்பு வீசியும் அசிங்கப்படுத்தினாங்க. சாவு வீட்ல தளபதியை இப்படி அசிங்கப்படுத்திட்டீங்களே! என்று திரை பிரபலங்களும் ரசிகர்களும் கோவப்பட்டாங்க. ஆனால் இதற்கு முன்னாடி எம்ஜிஆர் இறப்பு நிகழ்ச்சியில் கூட, ஜெயலலிதாவை புரட்சி தலைவரின் இறுதி ஊர்வல வண்டியில் ஏறவிடாமல் கையை பிடித்து இழுத்து கீழ விட்டு அசிங்கப்படுத்தினாங்க.
ஆனா அதன்பின் புரட்சித்தலைவி ஜெயலலிதா தமிழக முதலமைச்சரானார். அதேபோல் விஜய்யும் சிஎம் ஆவார் என்று ஒரு கூட்டம் நம்பிக் கொண்டிருக்கிறது. அதற்கேற்றார் போல் விஜய்யும் தமிழக அரசு என்னென்னவெல்லாம் இப்போது செய்கிறதோ, அதை எல்லாம் பதவிக்கு வரும் முன்பே செய்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் நடந்த வெள்ளப்பெருக்கில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண பொருட்களை வழங்கினார். இவர் அரசியல்வாதியாக மாறுவதற்கு இப்பவே நிறைய வேலைகளை செய்து கொண்டிருக்கிறார். அவருடைய ரசிகர்கள் நம்புவது போல், அசிங்கப்பட்டாலும் பின்னாளில் சிஎம் ஆவது உறுதி என்பதில் தளபதியும் திட்டவட்டமாக இருக்கிறார்.
Also Read: GOAT டேக் லைனில் ஒளிந்திருக்கும் சூழ்ச்சி..! வெங்கட் பிரபுவின் மாஸ் ஆன சம்பவம்