சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

பிரதீப் ரெட் கார்ட் பற்றி கேட்கப்பட்ட கேள்வி.. வாயை கொடுத்து மாட்டி கொண்ட பூர்ணிமா

BB7 Tamil: பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு மிகப்பெரிய கரும்புள்ளியாக அமைந்தது பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்த விஷயம் தான். பிரதீப் ரெட் கார்டை வாங்கிக் கொண்டு வெளியில் சென்றதிலிருந்து மாயா மற்றும் பூர்ணிமா எப்போது அந்த வீட்டை விட்டு வெளியேறுவார்கள் என பிரதீப் ஆதரவாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். சமீபத்தில் பூர்ணிமா 16 லட்சத்துடன் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறி இருக்கிறார்.

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை விட்டு நிறைய போட்டியாளர்கள் எலிமினேஷன் ஆகி வெளியே வந்தார்கள். அப்போதெல்லாம் பிரதீப் ஆண்டனி ரொம்பவும் அமைதியாக இருந்தார். இதுவரை வெளியே வந்தவர்கள் ரெட் கார்டு பற்றி தெளிவாக எதுவுமே சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார்கள். பூர்ணிமா வெளியே வந்ததும் பிரதீப் ஆண்டனி ரொம்பவும் கொதித்தெழுந்து நிறைய ட்வீட்டுகளை போட்டு வந்தார்.

அதாவது பூர்ணிமா அம்மாவுக்கு கொடுத்த வாக்குக்காக தான் நான் அமைதியாக இருக்கிறேன், கூலிக்கு மாரடிக்கிற கும்பல் எல்லாம் வாயை மூடிகிட்டு இருங்க என எச்சரிக்கை கொடுத்து இருந்தார். பிரதீப் ஆண்டனி இதுவரைக்கும் இந்த அளவுக்கு கோபப்பட்டு எந்தப் போட்டியாளரையும் பேசவில்லை. பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் போது பிரதீப் மற்றும் அவருடைய ஆதரவாளர்களுக்கு என்ன பதில் சொல்ல வேண்டி வரும் என ஏற்கனவே மாயா பயந்தது எல்லோருக்கும் தெரியும்.

Also Read:பிக் பாஸில் இருந்து வெளியேறிய பூர்ணிமாவின் மொத்த சம்பளம்.. 16 லட்சம் பணப்பெட்டி போக இவ்வளவு லட்சமா?

பூர்ணிமாவை பொறுத்த வரைக்கும் எவ்வளவு பெரிய தப்பு செய்தாலும் அதை எப்படியாவது பேசி சமாளித்து விடலாம் என்ற மன தைரியம் அவருக்கு ரொம்பவே அதிகம். இதை வீட்டில் இருப்பவர்களே அவர் முன்னிலையில் சொல்லி இருக்கிறார்கள். தன்னால் முடிந்த வரை சுத்தி வளைத்து பேசி எதுவுமே நடக்காதது போல் காட்டிக் கொள்வாரே தவிர, ஆம் நான் செய்தது தப்புதான் என்று எந்த ஒரு நேரத்திலும் அவர் ஒத்துக் கொண்டதே கிடையாது.

பூர்ணிமா சொன்ன பதில்

அப்படிப்பட்ட பூர்ணிமாவிடம் பிரதீப்புக்கு ரெட் கார்டு கொடுத்தது பற்றி கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் சொல்லிய விதம் தான் ஹைலட்டான விஷயம். அதாவது கேட்கப்பட்ட கேள்விக்கு ரொம்பவும் நக்கலாக நான் யாருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் கிடையாது, ஒருநாள் எல்லோருக்கும் என்ன நடந்தது என புரியும் என பேசி விட்டார்.

பூர்ணிமா எப்போதுமே பேசி சமாளிப்பதில் ரொம்பவும் கெட்டிக்காரர் என்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் தான். பிரதீப் ஆண்டனி விஷயத்திலும் அதை தான் பாலோ பண்ணுகிறார். ஒரு வேலை அவருடைய தோழி மாயா வெளியில் வந்த பிறகு இருவரும் கலந்து பேசி இது பற்றி சொல்லலாம் என இருக்கிறார்களா, அல்லது இரண்டு பேரும் ஒன்றாக சேர்ந்து பிரதீப் ஆண்டனியிடம் ஆஜராகி பேசலாம் என்று இருக்கிறார்களா என்ற திட்டம் தெரியவில்லை.

Also Read:பிக் பாஸ் வீட்டை விட்டு 90 நாட்களுக்குப் பிறகு வெளியேறிய நிக்சன்.. மஜாவாக சுற்றிய மன்மதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

Trending News