வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

அவனும், அவன் தலையையும் பாரு.. கவுண்டமணியை உருவகேலி செய்த இயக்குனர்

Goundamani : நகைச்சுவையில் தமிழ் சினிமா முக்கிய இடத்திற்கு போக நாகேஷ் காரணமாக இருந்தார். அதன் பிறகு அந்த இடத்தை தக்க வைத்தது கவுண்டமணி மற்றும் செந்தில் தான். அதிலும் குறிப்பாக கவுண்டமணியின் காமெடி அப்போது ரசிகர்களால் பெரிய அளவில் பேசப்பட்டது. இவருடைய கால்ஷீட் தான் அப்போது குதிரைக்கொம்பாக இருந்தது.

அதில் கவுண்டமணி உருவ கேலியால் நிராகரிக்கப்பட்டு இருக்கிறார். பாரதிராஜா இயக்கத்தில் வெளியான 16 வயதினிலே படத்தில் ரஜினியின் வலது கையாக கவுண்டமணி நடித்திருந்தார். 16 வயதினிலே படம் மிகப்பெரிய வெற்றி அடைந்தவுடன் படத்தில் நடித்த பிரபலங்கள் எல்லோருக்குமே வாய்ப்பு குவிந்து வந்தது.

கவுண்டமணிக்கு மட்டும் எந்த வாய்ப்பும் வரவில்லை. இதை அடுத்து பாரதிராஜா தன்னுடைய இரண்டாவது படமான கிழக்கே போகும் ரயில் படத்தை எடுக்க தொடங்கினார். அப்போது அவருக்கு அசிஸ்டெண்டாக இயக்குனர் மற்றும் நடிகருமான பாக்யராஜ் பணியாற்றி வந்தார். அந்த சமயத்தில் காந்திமதியின் கணவருமாக, ராதிகாவின் மச்சான் கதாபாத்திரத்திற்கு ஒரு கேரக்டர் தேவைப்பட்டது.

Also Read : 500 படங்களில் நடித்ததை வைத்து ஓரே படத்தை தயாரித்த பாக்யராஜ் பட நடிகர்.. தோல்விக்கு பின் வறுமையால் இறந்து போன சம்பவம்

அப்போது பாக்யராஜ் கவுண்டமணியை நடிக்க வைக்கலாம் என்று கூறி இருக்கிறார். அவனும் அவன் தல முடியும், சொட்டை தலையுடன் இருக்காயா, முதல் படத்துல நடிச்சதே போதும் அவ வேண்டாம் என்று கூறிவிட்டாராம். அதன் பிறகு டெல்லி கணேஷை அந்த கதாபாத்திரத்திற்கு நடிக்க வைக்கலாம் என்ற பேச்சு வார்த்தை போய் உள்ளது.

ஆனால் பாக்யராஜ் எப்படியோ பாரதிராஜாவிடம் பேசி கவுண்டமணியை நடிக்க வைக்க சம்மதம் வாங்கிவிட்டாராம். அதன் பிறகு அந்த படத்தில் கவுண்டமணி கதாபாத்திரம் தான் பெரிய அளவில் பேசப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் அதன் பிறகு பாரதிராஜா இயக்கிய சிகப்பு ரோஜா படத்திலும் கவுண்டமணி நடித்திருந்தார்.

மேலும் பாரதிராஜா தொடர்ந்து கவுண்டமணிக்கு தனது படங்களில் வாய்ப்பு கொடுத்து வந்தார். அதுமட்டுமல்லாமல் பாக்யராஜ் தனது முதல் படத்திலும் கவுண்டமணிக்கு வாய்ப்பு கொடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு கவுண்டமணி புகழின் உச்சிக்கு செல்வதற்கு பாக்யராஜ் முக்கிய காரணமாக இருந்து கவுண்டமணி ள்ளார்.

Also Read : 4 படங்களில் ரஜினியுடன் கவுண்டமணி செய்த அலப்பறைகள்.. எஜமானுடன் தூக்கு சட்டிக்கு அலைந்த வெள்ளயங்கிரி

Trending News