Captain Vijayakanth: சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானா ஆண்டி என ஒரு பழமொழி சொல்வார்கள். அது யாருக்கு சரியாக இருக்கிறதோ இல்லையோ நடிகர் விஷாலுக்கு சரியாக இருக்கும். விஷால் ஆரம்ப காலகட்டத்தில் சண்டக்கோழி, திமிரு போன்ற படங்களில் நடித்த போது ஆக்ஷன் கிங் அர்ஜுனனுக்கு பிறகு தமிழ் சினிமாவில் அவருடைய இடத்தை நிரப்பும் வகையில் ஆக்சன் ஹீரோ வளர்ந்து வருகிறார் என சினிமா ரசிகர்கள் கொண்டாடத் தொடங்கினர்.
ஆனால் நடிகர் விஷால் ஹீரோ என்பதை தாண்டி அரசியல், நடிகர் சங்கம் என மொத்தமாக தன்னுடைய பெயரை டேமேஜ் செய்து கொண்டார். தொடர்ந்து அவருடைய படங்களும் படுதோல்வி அடைந்து வந்த நிலையில் விஷால் மார்க்கெட் போன நடிகராகவே தமிழ் சினிமாவில் பார்க்கப்பட்டார். அவரை மீண்டும் சினிமாவுக்குள் தூக்கிவிட்ட படம் என்றால் மார்க் ஆண்டனி தான்.
மார்க் ஆண்டனி ஹிட் சமயத்தில் பொது விழாக்களில் சாப்பிடும் போதெல்லாம் எம்மதமும் சம்மதம் என்பதை குறிப்பதற்காக அவர் செய்யும் விஷயம் மிகப் பெரிய அளவில் ட்ரோல் செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து மழை வெள்ளத்துக்காக ஒரு பக்கம் அவர் குரல் கொடுத்தது பாராட்டப்பட்டு கொண்டிருக்கும் நேரத்திலேயே, மீண்டும் அவரை ட்ரோல் செய்து வந்தார்கள்.
Also Read:கேப்டன் அந்த இடத்துல இருந்தா ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பாரு.. விஜய்யிடம் மன்னிப்பு கேட்ட மீசை வில்லன்
இது போன்ற ஒரு சமயத்தில்தான் நியூயார்க் சென்று இருந்த விஷால் அங்கு ஒரு பெண்ணுடன் ஊர் சுற்றுவது போல் வீடியோ போட்டு அது கடைசியில் காமெடியில் முடிந்தது. அந்த நேரத்தில் கேப்டன் விஜயகாந்த் மறைந்துவிட, அவருக்கு இரங்கல் தெரிவிக்கிறேன் என்ற பெயரில் விஷால் போட்ட ட்ராமா ரசிகர்களால் திட்டி தீர்க்கப்பட்டது. விஜயகாந்தின் மறைவை நடிகர் சங்கம் சரியாக கையாளவில்லை என நிறைய நெகட்டிவ் கமெண்ட்கள் வந்தன.
சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்ட விஷால்
இந்த சம்பவங்களை தொடர்ந்து வெளிநாட்டிலிருந்து திரும்பிய விஷால், கேப்டன் சமாதிக்கு நேரடியாக சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். அங்கு அவர் விஜயகாந்தை பற்றி பேசிய விஷயங்கள் மிகப்பெரிய அளவில் வைரலானது. சமாதிக்கு போனதோடு நிறுத்திக் கொள்ளாமல், கேப்டனின் வீட்டுக்கு சென்று அஞ்சலி செலுத்தியதோடு, நடிகர் சங்க கட்டிடத்திற்கு விஜயகாந்த் பெயரை வைப்பதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் சொல்லி இருக்கிறார்.
தொடர்ந்து சினிமா ரசிகர்களால் கிண்டலுக்கும், கேளிக்கும் உள்ளாகி இருந்த விஷால் இந்த ஒரே விஷயத்தால் நல்ல பெயர் வாங்கி விட்டார். அவர் மீது இருந்த மொத்த கரும்புள்ளியையும் விஜயகாந்த் மறைவின் மூலம் துடைத்து விட்டார். யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பது கேப்டன் விஜயகாந்த் விஷயத்தில் தான் சரியாக இருக்கிறது.
Also Read:கேப்டன் முதுகில் குத்திய நம்பிக்கை துரோகிகள்.. இறந்த பிறகு நீலி கண்ணீர் வடித்த விஜய்