Ravindhar Mahalakshmi: லிப்ரா நிறுவனத்தின் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகர் தற்போது உடல்நிலை குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அதாவது கடந்த வருடம் செப்டம்பர் மாதம் சீரியல் நடிகை மகாலட்சுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுடைய திருமணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்து இதெல்லாம் பணம் காசுக்காக செய்த திருமணம் என்று அவதூறான பேச்சுக்கள் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தது.
இதற்கெல்லாம் பதில் அளிக்கும் விதமாக இவர்கள் இருவரும் நாங்கள் தொடர்ந்து சேர்ந்து வாழும் சந்தோஷமான தருணம் மட்டுமே மற்றவர்களுக்கு பதிலடியாக இருக்கும் என்று சொல்லி வந்தார்கள். ஆனால் திருமணம் ஆன ஒரு வருடம் கூட ஆகவில்லை அதற்குள் தற்போது பண மோசடி பிரச்சனையில் ரவீந்தர் சிக்கிக்கொண்டார். அதாவது திடக்கழிவிலிருந்து மின்சாரம் தயாரிக்கலாம் என்று பாலாஜி என்பவரிடம் கூறி 16கோடியை ஆட்டையை போட்டு இருக்கிறார்.
பிறகு இது சம்பந்தமான ப்ராஜெக்ட் பற்றி பாலாஜி ரவீந்திரிடம் கேட்டதற்கு பல மாதங்களாக அலையவிட்டு இருக்கிறார். பின்பு இவர் ஏமாற்றுகிறார் என்று தெரிந்த பாலாஜி ரவீந்தர் மீது புகார் கொடுத்து விட்டார். அதனால் இது சம்பந்தமாக இவரை கைது செய்து ஒரு மாதம் புலால் ஜெயிலுக்கு அனுப்பப்பட்டார்.
Also read: ஜெயிலில் அனுபவித்த கஷ்டத்தை வாய் விட்டு கதறிய ரவீந்தர்.. இரண்டு பெரும் புள்ளிகளுடன் இருந்த சம்பவம்
தற்போது ஜாமினில் வந்திருக்கும் ரவீந்தர் மறுபடியும் இவருடைய வேலையை காட்ட ஆரம்பித்து விட்டார். பொதுவாக யூடியூபில் பேட்டி கொடுப்பதும், பிக் பாஸ் நிகழ்ச்சியை விமர்சிப்பதுமாகத்தான் இவருடைய அன்றாட வேலையாக பார்த்து இருந்தார். அதனால் ஜெயிலில் இருந்து வந்த பிறகும் தற்போது ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை ரிவ்யூ பண்ண ஆரம்பித்தார்.
அப்பொழுது ரிவ்யூ பண்ணும் அந்த நேரத்தில் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு தொடர்ந்து இவரால் பேச முடியாத அளவிற்கு போய்விட்டது. இவருக்கு நுரையீரலில் தொற்று ஏற்பட்டு விட்டதால் மூச்சு விடுவதில் சிரமம் ஆகிவிட்டதாக மருத்துவர்கள் கூறி விட்டார்கள். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது ஐசியூவில் ஆக்சிஜனை மாட்டிக் கொண்டு இருக்கிறார்.
ஆனாலும் இந்த நிலைமையில் கூட பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரிவ்யூ கொடுத்து அக்கப்போர்தனத்தை பண்ணி வருகிறார். திருமணத்திற்கு பிறகு இவருக்கு தொடர்ந்து வரும் பிரச்சனை விடாது கருப்பு என்பதற்கு ஏற்ப ஏழரை இவரிடம் ஒட்டிக்கொண்டு விட்டது. இது தெரியாமல் மகாலட்சுமியும் ரவீந்திரிடம் சிக்கிக் தலையில் அடித்துக் கொண்டு புலம்பி வருகிறார்.
Also read: ரவீந்தர், மகாலட்சுமி காதலை அம்பலப்படுத்திய பயில்வான்.. அடுத்தவ புருஷனுக்கு ஆசைப்பட்ட கேவலம்