5 Villains: என்னதான் ஒரு படத்தில் முன்னணி ஹீரோக்கள் நடித்தாலும், இவர்களுக்கு இணையாக வில்லன் கேரக்டர் தூக்கலாக இருந்தால் தான் அந்தப் படம் மக்கள் மத்தியில் பெரிய அளவில் ரீச் ஆகும். அப்படி சில படங்களில் வில்லன்கள் டெரராக மூஞ்சியை காட்டி நடித்தாலும் கடைசியில் ஹீரோக்களிடம் இருந்து மொக்கை வாங்கி காமெடியில் முடிந்து இருக்கும். தற்போது அந்த நடிகர்களை பற்றி பார்க்கலாம்.
விவேக் ஓபராய்: சிறுத்தை சிவா இயக்கத்தில் 2017 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் விவேகம் திரைப்படம் வெளிவந்தது. இதில் நெகட்டிவ் கேரக்டரில் விவேக் ஓபராய் நடித்திருக்கிறார். இப்படத்தின் கதை ஆனது ஏஜெண்டுக்கும் மாபியா கும்பலுக்கும் நடுவே நடக்கும் மோதல்களை காட்டப்பட்டிருக்கும். ஆரம்பத்தில் வில்லன் கேரக்டரில் வந்த விவேக் ஓபராய் பார்க்கவே பயங்கர வில்லனாக வருவார். ஆனால் படத்தில் முக்கால்வாசி அஜித்தின் புகழை பாடியதால் அவரிடமிருந்து மொக்கை வாங்கும் விதமாக கிளைமேக்ஸ் காட்சி எடுக்கப்பட்டிருக்கும்.
தேவ் கில்: எஸ்பி ராஜ்குமார் இயக்கத்தில் 2019 விஜய், தமன்னா, வடிவேலு நடிப்பில் சுறா திரைப்படம் வெளிவந்தது. இதில் நெகட்டிவ் கேரக்டரில் தேவ் கில் நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய் மீன்பிடிக்கும் கேரக்டரில் அநியாயங்களை பண்ணும் மினிஸ்டரை எதிர்த்துப் போராடி தனது மக்களுக்கு நல்லது செய்யும் எண்ணத்தில் படமாக்கப்பட்டிருக்கும். இதில் தேவ் வில்லனாக நடித்தது இவருக்கு கொஞ்சம் கூட செட் ஆகவில்லை என்று சொல்லும் அளவிற்கு படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் மொக்கை வாங்கி இருப்பார்.
விஜய் ராஜ்: 2015 ஆம் ஆண்டு ஆர்.எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் ஒரு ஆக்சன் படமாக காக்கி சட்டை வெளிவந்தது. இதில் நெகட்டிவ் கேரக்டரில் விஜய் ராஜ் நடித்திருக்கிறார். இவர் ஹிந்தியில் மிகவும் பிரபலமான இயக்குனர் மற்றும் எழுத்தாளரும் கூட. அப்படிப்பட்ட இவர் இப்படத்தில் ஊழல் செய்யும் அரசியல்வாதியாக இவருடைய கேரக்டரை வெளிக்காட்டி இருப்பார். அப்படி இவர் என்னதான் சீரியஸாக நடித்திருந்தாலும் இவருடைய நடிப்பு கடைசியில் காமெடியாக முடிந்து டம்மி பீஸ் என்று சொல்லும் அளவிற்கு தான் இருக்கும்.
பாபி சிம்ஹா: இவர் யார் என்று தெரியாத பொழுது வில்லனாக நடித்த ஜிகர்தண்டா படம் பெரிய அளவில் ரீச் ஆனதற்கு முக்கிய காரணமே இவருடைய வில்லங்கத்தனமான நடிப்பு தான். ஆனால் அப்படிப்பட்ட இவருடைய வில்லன் கேரக்டர் சாமி 2 படத்தில் கொஞ்சம் கூட இவருக்கு செட்டாகவில்லை என்று சொல்லும் அளவிற்கு இராவணன் பிச்சை கேரக்டரில் நடித்திருப்பார். முக்கியமாக விக்ரம் இவருடைய வில்லங்கத்தனத்தை கொஞ்சம் கூட மதிக்காத அளவிற்கு இருப்பது இவரை கோமாளியாக தான் மக்கள் பார்வைக்கு தெரிந்தது.
வினய் ராய்: பாண்டிராஜ் இயக்கத்தில் எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 2022 ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்தது. இதில் வில்லன் கேரக்டரில் வினய் ராய் மோசடி செய்யும் கும்பலின் தலைவராக கொடூரமாக ஆரம்பத்தில் காட்டப்பட்டிருக்கும். ஆனால் கடைசியில் இந்த வில்லன் கேரக்டருக்கு இவர் கொஞ்சம் கூட லாய்க்கு இல்லை என்று சொல்லும் அளவிற்கு கிளைமேக்ஸ் காட்சியில் ஜோக்கர் ஆகத்தான் மொக்கை வாங்கி இருப்பார்.