Gunasekaran who came to encourage Jallikattu players: பொங்கல் பண்டிகை என்றாலே எது இருக்கோ இல்லையோ கண்டிப்பாக ஜல்லிக்கட்டு விளையாட்டு ஒவ்வொரு வருடமும் நடைபெறுவது வழக்கம். இது தமிழர்களின் வீர விளையாட்டு என்று நெஞ்சை நிமிர்த்தி சொல்லும் ஒரு உணர்ச்சி பூர்வமானது.
அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அவனியாபுரம், அரங்கநல்லூர், பாலமேடு போன்ற இடங்களில் தமிழர்களின் வீர விளையாட்டு இன்று நடைபெற்று வருகிறது. இதில் 1000 காளைகள், 600 மாடு பிடிக்க விளையாட்டு வீரர்கள் களமிறங்கி இருக்கிறார்கள்.
இதில் மொத்தம் எட்டு சுற்றுகள் நடைபெற இருக்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு விளையாட்டு வீரர்களையும் தெம்பூட்டடும் விதமாக எதிர்நீச்சல் சீரியலில் கரடு முரடான கதாபாத்திரத்தை செய்து வரும் குணசேகரன் என்கிற வேலராமமூர்த்தி மதுரையை சேர்ந்தவர் என்பதால் அவனியாபுரத்தில் நடக்கும் ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு அவருடைய முழு ஆதரவையும் தெரிவித்து வருகிறார்.
Also read: ஜனனி அப்பத்தாவுடன் சம்பந்தம் வைக்கப் போகும் குணசேகரன்.. நாரதர் வேலையை பார்க்கும் முட்டாள் பீஸ்
அந்த வகையில் கடந்த வருடம் கூட ஜல்லிக்கட்டுக்கு சப்போர்ட்டாக பேசி இவருடைய முழு ஆதரவையும் தெரிவித்திருந்தார். அதுவும் இவருடைய மொட்டை மாடியில் இருந்தே பார்க்கும் அளவிற்கு நடக்கும் ஜல்லிக்கட்டு வீரர்களை ஊக்குவித்து வருவார்.
அதே மாதிரி இந்த வருடமும் குடும்பத்துடன் சேர்ந்து நடக்கிற ஜல்லிக்கட்டு விளையாட்டு பார்த்து யார் இதில் வெற்றி பெறுவார் என்பதை உற்றுநோக்கிக் கொண்டு வருகிறார். ஜல்லிக்கட்டு நேரில் பார்க்கிறவன் தான் உண்மையான இழந்தாரி பையன் என்பதற்கு ஏற்ப பக்கத்தில் இருந்து விளையாட்டு வீரர்களுக்கு ஆதரவாக பேசி நிகழ்ச்சியை கண்டு வருகிறார்.
Also read: பச்சோந்தியாக மாறிய ஜனனியின் தங்கை.. நிஜமாகவே எதிர்நீச்சல் இயக்குனர் ஜெயிலுக்கு போய்விட்டார் போல!