ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

5 அக்கட தேச நடிகர்களையும் வளர்த்துவிட்ட விஜயகாந்த்.. உச்சாணி கொம்பில் தூக்கிவிட்டு அழகு பார்த்த கேப்டன்

Vijayakanth : பொதுவாகவே சினிமாவில் மிகப்பெரிய உயரத்தில் உள்ள சில பிரபலங்களை கேப்டன் தான் அறிமுகப்படுத்தினார். பொதுவாகவே மதுரைக்காரர் என்றாலே விஜயகாந்துக்கு தனி பிரியம் இருக்குமாம். இதனால் அவர்களுக்கு படங்களில் வாய்ப்பு வாங்கி தருவார் என்று சொல்லப்படுகிறது. ஆனால் அக்கட தேச மொழிகளில் உள்ள நடிகர்களையும் விஜயகாந்த் வளர்த்து விட்டிருக்கிறார். அவர்கள் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகுல் தேவ் : அஜித் நடிப்பில் வெளியான வேதாளம் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தவர் தான் ராகுல் தேவ். இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமான படம் விஜயகாந்தின் படம் தான். அதாவது 2008 ஆம் ஆண்டு விஜயகாந்த் நடிப்பில் வெளியான அரசாங்கம் படத்தில் ராகுல் தேவ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

கலாபவன் மணி : மலையாள சினிமாவில் புகழ்பெற்ற நடிகராக இருந்தவர் தான் கலாபவன் மணி. தமிழில் இவர் சில படங்களில் நடித்திருந்தாலும் விஜயகாந்தின் நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் படத்தில் நடித்தது மூலம் பிரபலம் அடைந்தார். பிறகு தமிழில் கலாபவன் மணிக்கு நிறைய பட வாய்ப்புகள் குவிந்தது.

Also Read : விஜயகாந்த்திடமே பேரம் பேசி பண திமிரில் அசிங்கப்படுத்திய வடிவேலு.. சிரித்துக் கொண்டே கடந்து சென்ற கேப்டன்

சலீம் கவுஸ் : பாலிவுட்டில் பிரபல நடிகரான சலீம் கவுஸ் விஜய்யின் வேட்டைக்காரன் படத்தில் நடித்திருந்தார். இவர் தமிழில் திருடா திருடா, வெள்ளிவிழா போன்ற படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜயகாந்த் நடிப்பில் வெளியான சின்ன கவுண்டர் படத்தில் சக்கரை கவுண்டர் என்ற எதிர்மறையான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி இருப்பார்.

முகேஷ் ரிஷி : தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் தான் முகேஷ் ரிஷி. இவர் சூர்யாவின் சிங்கம் படத்தில் நடித்திருந்தார். இதற்கு முன்னதாக இவர் கேப்டனின் வல்லரசு மற்றும் ரமணா ஆகிய படங்களில் நடித்திருந்தார். தமிழில் இவருக்கு விஜயகாந்தால் தான் வாய்ப்பு கிடைத்தது.

கசான் கான் : வில்லன் கதாபாத்திரங்களின் பெரும்பாலும் நடித்து மிரட்டியவர் தான் கசான் கான். இவர் தமிழ், மலையாளம் படங்களில் நடித்தாலும் மிகப்பெரிய அடையாளத்தை கொடுத்தது சேதுபதி ஐபிஎஸ் படம் தான். இந்த படத்தில் விஜயகாந்த் வாய்ப்பு வாங்கி கொடுத்த நிலையில் இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு அடுத்த கட்டத்திற்கு சென்றார்.

Also Read : விஜயகாந்த் நடிக்க தவறவிட்ட 5 சூப்பர் ஹிட் படங்கள்.. கேப்டன் இடத்துக்கு மூன்று முறை வந்து ஜெயித்த மம்முட்டி

Trending News