Shankar Movies: சினிமாவில் எத்தனையோ இயக்குனர்கள் பல வெற்றி படங்களை கொடுத்தாலும், ஒரு சில இயக்குனர்களின் படைப்புகள் பொக்கிஷமாக இருக்கும். அந்த வகையில் இயக்குனர் சங்கரின் அற்புத படைப்பு பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்திருக்கிறது. அப்படி இவருடைய இயக்கத்தில் நடித்த சில ஹீரோக்கள் ஜெயித்து முன்னணி ஹீரோவாக வந்திருக்கிறார்கள். அவர்களைப் பற்றி தற்போது பார்க்கலாம்.
அர்ஜுன்: இவர் முக்கால்வாசி நடித்த படங்கள் அனைத்தும் சண்டைக் காட்சிகளும், தேசப்பற்றும் மிகுந்த படங்களும் ஆக மக்கள் மத்தியில் ஒரு பிம்பத்தை ஏற்படுத்தி விட்டது. அதன் வாயிலாக இவருடைய நடிப்புக்கே பல படங்கள் வெற்றி அடைந்தது. இன்னும் இவருக்கு ஒரு பிளஸ் பாயிண்ட் ஆக இயக்குனர் சங்கர் இயக்கத்தில் இணைந்து சில வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அப்படித்தான் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த ஜென்டில்மேன் படமும் அடுத்து 1999 ஆம் ஆண்டு முதல்வன் படமும். இந்த இரண்டு படங்களுமே அர்ஜுன் கேரியரில் மிக பெஸ்ட் என்று சொல்லும் அளவிற்கு கை கொடுத்து தூக்கி விட்டிருக்கிறது.
பிரசாந்த்: 90களில் இவருடைய நடிப்புக்கு மயங்காத ஆளே இல்லை என்பதற்கு ஏற்ப இளசுகளின் மனதை கொள்ளையடித்திருக்கிறார். அதுவும் இவருடைய டான்ஸ், சிரிப்பு, காதல் மற்றும் ரொமான்ஸ் அனைத்துக்கும் இவர் ஒருவரே தலைவர் என்று சொல்லும் பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடன் இணைந்து சங்கர் இயக்கிய படம் தான் ஜீன்ஸ். இதில் இரட்டை வேடத்தில் பிரசாந்த் நடித்து காதல் நாயகன் மற்றும் ஆணழகன் என்று சொல்லும் அளவிற்கு படம் சூப்பர் டூப்பர் ஹிட் ஆகிவிட்டது.
Also read: வருட கணக்காக ரிலீஸ் பண்ண முடியாமல் கோடிக்கணக்கில் நஷ்டத்தில் 5 படங்கள்.. பிரசாந்த்தின் கெட்ட நேரம்
விக்ரம்: இவரைப் பற்றி முதலில் சொல்ல வேண்டும் என்றால் உடலை வருத்திக்கொண்டு கதாபத்திரத்திற்கு தகுந்த மாதிரி மெருகேற்றி நடிக்கக்கூடிய ஒரு திறமையான ஹீரோ. ஆரம்பத்தில் பல தோல்விகளையும் அவமானங்களையும் சந்தித்த இவருக்கு ஏணிப்படியாக அமைந்த ஒரு படம்தான் சேது. ஆனால் அதன் பின் இந்த வெற்றியைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒவ்வொரு படங்களிலும் போராடி தற்போது முன்னணி ஹீரோவாக வந்திருக்கிறார். அப்படிப்பட்ட இவருடைய கேரியரில் வித்தியாசமான நடிப்பையும், கதையும் வெளிப்படுத்தி காட்டியது இயக்குனர் சங்கர் தான். இவர்களுடைய காம்போவில் வெளிவந்த விக்ரமின் அந்நியன் படம் ஆக்சன் படமாக வெற்றி அடைந்திருக்கிறது.
சித்தார்த்: திறமை இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதற்கு உதாரணமாக நடிகர் சித்தார்த்தை சொல்லலாம். ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்படாத கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர், சங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு பாய்ஸ் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகம் ஆனார். முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பையும் திறமையும் வெளிக்காட்டி மற்ற இயக்குனர்களையும் கவர்ந்து விட்டார். அதன் மூலம் தொடர்ந்து பட வாய்ப்புகள் பெற்று தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வளர்ந்து விட்டார்.
பிரபு தேவா: ஆரம்பத்தில் டான்ஸ் மாஸ்டராக சினிமாவிற்குள் நுழைந்த இவர், கிட்டதட்ட ஆறு வருடங்களாக நடனத்தில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி இருக்கிறார். அதன் பின் இவருக்கு நடிகராக வாய்ப்பு கிடைத்த படம் தான் இந்து. இந்த ஒரு படத்தின் மூலம் இயக்குனர் சங்கருக்கு மிகவும் கவர்ந்த ஹீரோவாக இடம் பிடித்து விட்டார். அதனால் இவருடைய அடுத்த படமே ஷங்கர் இயக்கிய காதலன் படம். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்று காதலர்களுக்கு ஒரு பொக்கிஷமான படமாக முத்திரை பதித்து பல விருதுகளை வாங்கி குவித்து விட்டது.
Also read: மணிரத்னம் பட ஹீரோயினுடன் லிவிங் டுகதரில் இருக்கும் சித்தார்த்.. இன்ஸ்ட்டாவில் வைரலாகும் புகைப்படம்