வியாழக்கிழமை, ஜனவரி 2, 2025

தலைகனத்துடன் நடித்த ஹார்ட் ஜிலேபி.. அனுஷ்காவை காணாமல் போக வைத்த 5 படங்கள்

South Indian Actress Anushka Shetty’s worst and flop tamil movies: “தேவலோகத்து தேனோ இந்த தேவசேனா” என்று வசீகர தோற்றத்துடன் கம்பீர அழகுடன் ரசிகர்களை கிரங்கடிக்கும் புன்னகை அரசி அனுஷ்கா திரைத்துறையில் கால் பதித்து 18 வருடங்கள் கடந்த பின்பும் தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் உள்ளங்களை ஆண்டு வருகிறார்.

இவர் நடிப்பில் வெளிவந்த அருந்ததி, பாகுபலி போன்றவை நாயகர்களுக்கு உண்டான இமேஜை கொடுத்தாலும், யானைக்கும் அடி சறுக்கும் என்பது போல் அனுஷ்காவின் சில தோல்வி படங்கள் அவரின் கேரியரில் கரும்புள்ளியாக அமைந்தது.

அலெக்ஸ் பாண்டியன்: இப்படத்தில் அனுஷ்கா கார்த்தியுடன் அரை மனதாகவே நடித்தார் எனலாம். ஏனென்றால் இவர் தனக்கு மேக்கப் போடுவதற்கு என்று சில மேக்கப் பாஸ் ஆர்ட்டிஸ்ட்களை அழைத்து வர, இங்கிருக்கும் யூனியன் மெம்பர்கள் இதற்கு எதிராக கொடிபிடிக்க பிரச்சனை பூதாகரமாகி, கார்த்தி தலையிட்டால் சமரசம் செய்யப்பட்டது.  ஆரம்பம் முதல் பிரச்சனையோடு தொடங்கிய இப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றியும் பெறவில்லை.

தாண்டவம்: 2012 ஆம் ஆண்டு விக்ரம், அனுஷ்கா, எமி ஜாக்சன், ராய் லட்சுமி என பலரும் நடித்து வெளிவந்த தாண்டவம் படத்தில் வேண்டா வெறுப்பாக திருமணம் செய்து கொண்ட விக்ரமும் அனுஷ்காவும், காதலை தொடரும் நேரத்தில் பிரிந்து போனது ரசிகர்களை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியது. சிறப்பான கதை என்றாலும் திரைக்கதையில் ஏற்பட்ட தொய்வால் வெற்றி பெற முடியாமல் போனது.

Also read: கல்யாணம் வேண்டாம், ஆனா புள்ள பெத்துக்கணும்.. மோசமான கதையில் ரீ என்ட்ரி கொடுத்த அனுஷ்காவின் மிஸ் ஷெட்டி ட்ரெய்லர்

சகுனி: கார்த்தி, பிரணிதா, ராதிகா மற்றும் அனுஷ்கா  நடிப்பில் 2012 ஆம் ஆண்டு வெளிவந்த சகுனியில் ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் ரோல் பண்ணி இருந்தார் அனுஷ்கா. சாந்தமான காவல்துறை அதிகாரியாக கார்த்தி உடன் ரொமான்ஸ் பண்ணி இருந்தார். கம்பீரமாக இவரை பார்த்த ரசிகர்கள் இந்த போலீஸ் கெட்டப்பில் கொஞ்சம் ஏமாந்து தான் போனார்கள்.

இரண்டாம் உலகம்: செல்வவராகவன் இயக்கத்தில் பல உலகங்களை காண்பித்து ரசிகர்களை தலைசுற்ற வைத்த படம் இரண்டாம் உலகம். ரம்யா, வர்ணா என இரு கேரக்டர்களில் நடித்திருந்த அனுஷ்கா கதாபாத்திரங்களை வேறு படுத்தாமல் ஒரே மாதிரியாக நடித்து ரசிகர்களை கடுப்பேற்றி இருந்தார். இறுதியில்  இரண்டாம் உலகத்தின் லாஜிக் புரியாமல் ரசிகர்கள் குழம்பி தவித்தனர்.

லிங்கா: நான் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்கும் அளவுக்கு உயர்ந்து விட்டேன் என்று பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார் அனுஷ்கா. இதை பேட்டி ஒன்றில் வெளிபடுத்தியும் உள்ளார். கேஎஸ் ரவிக்குமார் மற்றும் ரஜினியின் வெற்றிக் கூட்டணியில் வெளிவந்த லிங்கா ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிறைவு செய்ய முடியாமல் தோல்வியை தழுவியது. பெரும் எதிர்பார்ப்புடன் இருந்த அனுஷ்காவோ லிங்காவின் தோல்வியால் மிகவும்  மனம் உடைந்து போனார்.

Also read: அனுஷ்காவை ஒருதலையாக காதலித்த பிரபல நடிகர்.. லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறாரா தேவசேனா?

Trending News