வியாழக்கிழமை, ஜனவரி 9, 2025

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகாவை தொடர்ந்து குட் நியூஸ் சொன்ன சூப்பர் ஜோடி.. பல வருடங்களாக இந்த செய்திக்காக ஏங்கிய ரசிகர்கள்

Vijay Devarakonda – Rashmika: ஒரு சில படங்களை பார்க்கும் பொழுது அந்த ஹீரோ மற்றும் ஹீரோயின் உண்மையிலேயே திருமணம் செய்து கொண்டால் நன்றாக இருக்கும் என ரசிகர்களுக்கு தோன்றுவது உண்டு. அதிலும் அவர்கள் தொடர்ந்து இரண்டு, மூன்று படங்களில் இணைந்து விட்டால் காதலில் இருப்பதாக கிசுகிசுக்கள் உடனே தொடங்கி விடும். ஒரு சில ஜோடிகளை பார்க்கும் பொழுது அந்த கிசுகிசு கூட உண்மையாகி விடாதா, இவர்கள் இருவரும் உண்மையிலேயே சேர்ந்து விட மாட்டார்களா என ரசிகர்கள் ஏங்கிய சம்பவங்களும் உண்டு.

கீதகோவிந்தம் படத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா இருவருக்கும் இடையே கெமிஸ்ட்ரி வேற லெவலில் வேலை செய்திருந்தது. இதைத் தொடர்ந்து மீண்டும் இவர்கள் ஒரு சில படங்களில் இணைந்து நடிக்கும் பொழுது உண்மையிலேயே காதலிக்கிறார்கள் என்று செய்திகள் பரவத் தொடங்கியது. ஒரு பக்கம் இந்த ஜோடி இதை மறுத்தாலும், சமூக வலைத்தளத்தில் ராஷ்மிகா பதிவிட்ட ஒரு போட்டோவால் இவர்கள் இருவரும் டேட்டிங் செய்து கொண்டிருப்பதாக உறுதியானது.

சமீபத்தில் இந்த டோலிவுட் ஜோடி விரைவில் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும், வரும் பிப்ரவரி மாதம் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது. அட உண்மையிலேயே இவங்க ரெண்டு பேரும் காதலிச்சு தான் இருந்திருக்காங்க என ரசிகர்கள் அதிர்ச்சியில் இருக்கும் சமயத்திலேயே, மற்றொரு சூப்பர் ஹிட் ஜோடி கல்யாண தேதியை விரைவில் அறிவிக்க இருப்பதாக வந்திருக்கும் செய்தி ஒட்டுமொத்த இந்திய சினிமா உலகையும் உலுக்கி விட்டது.

Also Read:பல்லு போற வயசுல 5 பெருசுகள் பண்ணிய ரவுசுகள்.. இன்னும் 60 வயசு ஆகல என சப்பை கட்டு கட்டிய கில்லி

அழகென்ற சொல்லுக்கு அர்த்தமே அனுஷ்கா தான் என இன்று வரை தென்னிந்திய சினிமா ரசிகர்கள் அவரை கொண்டாடி வருகிறார்கள். பாகுபலி பட சமயத்தில் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவருக்கும் இடையே காதல் பற்றிக் கொண்டதாக சொல்லப்பட்டது. பாகுபலி 2 ரிலீஸ் ஆன பிறகு இவங்க இரண்டு பேரும் ஒண்ணா சேர்ந்தா நல்லா இருக்குமே என தென்னிந்திய சினிமா ரசிகர்கள் ஏங்க ஆரம்பித்து விட்டார்கள்.

குட் நியூஸ் சொன்ன சூப்பர் ஜோடி

வாய்ப்பு கிடைத்தால் இருவரின் வீட்டிற்குமே சென்று ரசிகர்களே பேசி திருமணத்திற்கு கூட சம்மதிக்க வைக்க ரெடியாக இருந்தார்கள். ஆனால், ஒரு சில பிரச்சனைகளால் அனுஷ்கா மற்றும் பிரபாஸ் இருவருமே அவர்களுடைய காதலை மீடியா முன்பு நிராகரித்து விட்டார்கள். இதற்கிடையில் பிரபாஸ் வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூட செய்திகள் வெளிவந்தது. இப்போது உண்மையில் பிரபாஸ் மற்றும் அனுஷ்கா தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார்கள்.

இவர்கள் இருவருக்கும் வரும் மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் ஏற்பாடு செய்யப்பட்டு, ஏப்ரலில் திருமணம் நடைபெற இருக்கிறதாம். இந்த புனிதமான காதலுக்கு காரணமாக இருந்த இயக்குனர் ராஜமவுலி தான் இவர்களுடைய திருமணத்தை தலைமை தாங்க இருக்கிறாராம். பிரபாஸுக்கு 44 வயது ஆவது போல், அனுஷ்காவுக்கு இப்போது 42 வயது. அறுபதாம் கல்யாணத்திற்கான வயது வருவதற்குள் நல்ல முடிவை எடுத்து விட்டார்கள் என இப்போது ரசிகர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை தெரிவித்து வருகிறார்கள்.

Also Read:கவர்ச்சி நடனத்துக்காக வளர்த்து விட்ட 6 நடிகைகள்.. டிஆர் கண்டுபிடித்த அந்த பால் கொழுக்கட்டை!

Trending News