Gossip: தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மொழிகளில் கவர்ச்சி நடிகை ஆக ரவுண்டு கட்டியவர் தான் அந்த கிளாமர் குயின். இவருடைய ஹைட், வெயிடை பார்த்த இளசுகள் இந்த நடிகையை ‘அரேபிய குதிரை’ என்றே செல்லமாக அழைப்பார்கள்.
இதனாலையே நடிகைக்கு தமிழ்நாட்டில் ரசிகர் ஒருவர் கோயிலை கட்டியுள்ளார். கோலிவுட்டில் கிளாமர் நடிகையாக டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு, அதன் பின் உடல் எடை அதிகமானதும் மெல்ல மெல்ல மார்க்கெட்டை இழந்தார். இதனால் இடையில் கொஞ்சம் காலம் சினிமாவில் இருந்து பிரேக் எடுத்த நடிகை, ரியாலிட்டி ஷோக்களிலும் சின்னத்திரையிலும் ரீ என்ட்ரி கொடுத்தார்.
அதே ஆண்டில் தனது நீண்ட நாள் காதலனை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் நடிகை திடீரென்று தன்னுடைய காதல் கணவரை பிரிந்து சென்றுள்ளார். இதற்கு காரணம் கோடீஸ்வர தொழிலதிபராக இருந்து வரும் போதை கடத்தல் வியாபாரி ஒருவருடன் அந்த நடிகைக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் சில மாதங்களாகவே அவ்வப்போது நெருக்கமாக இருந்திருக்கின்றனர். ஒரு கட்டத்தில் நடிகை, குடும்பம் குழந்தை குட்டி எல்லாம் வேண்டாம் என்று பணத்திற்காக இப்போது கள்ளக்காதலுடன் ஓட்டம் பிடித்து விட்டார்.
பாவம்! அந்த காதல் கணவர் தான் இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு நடிகை மீண்டும் தன்னிடமே வருவார் என்று இலவு காத்தக் கிளியாக காத்துக் கொண்டிருக்கிறார். ஆனால் நடிகை வருவதா ஐடியாவே இல்லை, தன்னுடைய கவர்ச்சியை காட்டி கடத்தல் வியாபாரியை வசமா வளைத்து போட்டு செட்டில் ஆகிவிட்டார்.