ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

திறமை இல்லைனாலும் பணம் வைத்துக்கொண்டு ஹீரோவாக போகும் 4 வாரிசுகள்.. இவங்கள யாரு பாக்குறது!

4 successor actors will become heroes next: பொதுவாக திரையுலகில் இருக்கும் பல நடிகர்கள் வாரிசு நடிகர்கள் தான். அதிலும் சினிமா துறையில் பிரபலமான நடிகர்கள் தங்களது வாரிசுகளுக்கு நடிப்பு வருதோ இல்லையோ பணம் காசுகளை கொடுத்து அவர்களை தங்களது சொந்த தயாரிப்பில் படம் எடுத்து ஹீரோவாக்கி விடுவார்கள். அப்படிதான் நான்கு ஹீரோக்கள் தற்போது தமிழ் சினிமாவில் கதாநாயகங்களாக அறிமுகமாக தயாராகிவிட்டனர். ஆனால் இவர்கள் நடிக்கும் படத்தை யார் பார்க்கிறது என்று தான் தெரியவில்லை.

சூர்யா விஜய் சேதுபதி: சிந்துபாத் படத்தில் விஜய் சேதுபதியுடன் அவரது மகன் சூர்யா நடித்திருந்தார். அதன் பின் வேறு எந்த படத்திலும் நடிக்காமல், படிப்பில் கவனம் செலுத்தினார். ஆனால் இப்போது பைட் மாஸ்டர் அனல் அரசு கதையில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா விஜய் சேதுபதி ஹீரோவாக நடிக்கிறார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் துவங்கப்பட்டது.

இந்த படத்திற்கு பிறகு அடுத்தடுத்து இன்னும் தொடர்ந்து படங்களில் சூர்யா விஜய் சேதுபதி நடிக்க முடிவெடுத்துள்ளார். இவருக்கு ஹீரோவாக கூடிய திறமை இருக்குதோ இல்லையோ ஆனா இந்த வாய்ப்பு அவருடைய அப்பா மூலம்தான் சூர்யாவிற்கு கிடைத்தது. இதை அவர் வேண்டுமானால் மறுக்கலாம், ஆனால் அதுதான் நிதர்சனமான உண்மை.

தர்ஷன்: தமிழ் சினிமா என்ற ஒன்று துவங்கிய காலத்தில் தனது நடிப்பின் மூலம் மக்களை வியப்பில் ஆச்சரியப்படுத்தியவர் தான் நடிப்புச் சக்கரவர்த்தி செவிலியர் சிவாஜி கணேசன். இன்றும் இவருடைய நடிப்புக்கு யாருமே நிகர் இல்லை. இவருடைய மகன் பிரபு ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமானாலும், அவரால் தந்தையைப் போல் உச்சம் பெறவில்லை. அதன் பின் பிரபுவின் மகன் விக்ரம் பிரபு ஹீரோவாக அறிமுகமாகி தற்போது வரை டாப் நடிகராக போராடிக் கொண்டிருக்கிறார்.

இப்போது சிவாஜி கணேசனின் குடும்பத்திலிருந்து அடுத்த வாரிசான தர்ஷன் நடிக்க உள்ளார். இவர் சிவாஜியின் பேரன், அதாவது சிவாஜியின் மூத்த மகன் ராம்குமாரின் இரண்டாவது பையன் தான் தர்ஷன். இவர் இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் கிராமத்து கதையை மையமாக வைத்து உருவாகும் படத்தில் தான் தர்ஷன் ஹீரோவாக நடிக்க உள்ளார்.

Also Read: யாரென்று தெரியாத காலத்தில் விஜய் சேதுபதி நடித்த 5 படங்கள்.. அடையாளம் காட்டிய முதல் படம்

ஹீரோவாக போகும் நான்கு வாரிசு நடிகர்கள்

ஆகாஷ் முரளி: நடிகர் முரளிக்கு இரண்டு மகன்கள் உள்ளார். அதில் மூத்த மகன் அதர்வா தமிழ் சினிமாவில் பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமாகி, அதன் பின் தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இருப்பினும் இவரால் ஒரு வெற்றி படத்தைக் கொடுக்க முடியாமல் திணறுகிறார். இந்த நிலையில் அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளியை மாஸ்டர் பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ ஹீரோவாக அறிமுகப்படுத்த உள்ளார். இதற்கு காரணம் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ மகள் சினேகாவும், ஆகாஷ் முரளியும் கடந்த 2020 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

தனது சொந்த மருமகனை சேவியர் பிரிட்டோ 35 கோடி பொருட்செலவில் மிகப்பெரிய பட்ஜெட் படத்தில் ஹீரோவாக அறிமுகப்படுத்த பார்க்கிறார். இவருக்கு ஜோடியாக அதிதி சங்கர் அந்த படத்தில் நடிக்கிறார். ஆகாஷ் முரளிக்கு திறமை இருக்கிறதா என்பதெல்லாம் அடுத்த விஷயம் தான், பணத்தை வைத்து சுலபமாகவே ஹீரோ ஆவது திறமையான இளம் நடிகர்களின் வயிறு எரிகிறது.

ராம் கேசவ்: 80களில் டாப் நடிகையாக இருந்த அம்பிகாவிற்கு ராம் கேசவ், ரிஷி கேசவ் என்ற இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் ரிஷி கேசவ் நடிகர் லிவிங்ஸ்டன் மகளுடன் ‘கலாசல்’ என்ற படத்தில் ஹீரோவாக அறிமுகமானார். அடுத்ததாக ராம் கேசவ் தமிழ் மற்றும் மலையாள படங்களில் அடுத்து ஹீரோவாக என்ட்ரி ஆகுவதற்காக கதை கேட்டுக் கொண்டிருக்கிறார். விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் என்று சமீபத்திய விருது வழங்கும் விழாவில் அம்பிகா தெரிவித்துள்ளார்.

Also Read: தெருக்கோடியிலிருந்து கோபுரத்திற்கு வந்த விஜய் சேதுபதியின் அசர வைக்கும் சொத்தின் மதிப்பு!

Trending News