Actor vela ramamoorthy angry speech about captain miller film crew: அருண்மாதேஸ்வரன் இயக்கத்தில் பொங்கல் விடுமுறை ஒட்டி வெளியான தனுஷின் படம் கேப்டன் மில்லர். வெளிவந்து பத்து நாட்களைக் கடந்து உள்ள இப்படம் எதிர்பார்த்த வசூலை அடையவில்லை என்ற ஏக்கத்தில் இருந்து வந்த நிலையில் கதை என்னுடையது என்று படக்குழுவினரை ஒரு காட்டு காட்டியுள்ளார் குணச்சித்திர நடிகர்.
தனுஷ், பிரியங்கா மோகன், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சமுத்திரகனி என பல முன்னணி நட்சத்திரங்களுடன் கேப்டன் மில்லர் டைம் பீரியட் கதையை அதிரடி ஆக்சன் உடன் தெறிக்க விட்டிருந்தார் இயக்குனர் அருண் மாதேஸ்வரன். கதை படி பிரிட்டிஷ் படையில் சேர்ந்து அவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபடும் பொருட்டு படையை விட்டு வெளியே வந்து சுதந்திர போராட்டத்தில் தன் மக்களுக்காக குரல் கொடுக்க ஆயுதம் ஏந்திய தலைவனாக வருகிறார் தனுஷ்.
இந்த கதை மற்றும் கதையில் இடம்பெறும் காட்சிகள் சிலவற்றை மட்டும் மாற்றம் செய்து தன்னுடைய பட்டத்து நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கியுள்ளனர் என்று குணச்சித்திர நடிகர் வேல ராமமூர்த்தி கூறியுள்ளார். மேலும் இது குறித்து காண்டான ராமமூர்த்தி பட குழுவினரை சரமாரியாக திட்டி தீர்க்கவும் செய்துள்ளார்.
Also read: ரஜினியை காப்பி அடித்து அசிங்கப்பட்ட தனுஷ்.. புலியை பார்த்து சூடு போட்டு மாட்டிக்கொண்ட அவலம்
இப்படி செய்வதற்கு உங்களுக்கு அசிங்கமா இல்லையா. நான் என்ன செத்தா போயிட்டேன் என்கிட்ட ஒரு வார்த்தை கூட அனுமதி கேட்காமல் செய்யும் இவர்களின் செயல் கேவலத்திற்கு உரியது என கேப்டன் மில்லரை வசை மாரி பொழிந்துள்ளார் ராமமூர்த்தி. இது மட்டுமின்றி மாஸ் டைரக்டர் ராஜமவுலியையும் விட்டு விடாமல் RRR படத்தில் உள்ள காட்சிகள் சிலவை என் கதையில் உள்ள மாதிரியே உள்ளன என, என் ரசிகர்கள் என்னிடம் கூறியுள்ளனர்.
தென்னிந்திய திரைப்பட சங்கத்தில் அவரது கதையை பதிவு செய்திருப்பதாகவும் அப்படியே ஆதாரத்துடன் கேட்கும் பட்சத்தில் என்னையே அசர வைக்கும் படி பதில் உரைத்து விடுவார்கள் என்றும் வலுத்தவன் பக்கம் தான் நியாயம் கிடைக்கும் என்று கேப்டன் பட குழுவினரை காட்டமாக சீண்டி உள்ளார்.
இது குறித்து வலைதளங்களில் நெட்டிசன்கள் பலரும் கதையே கேவலமா இருக்கு ஏன்டா பாக்க போனோம்னு கொடுமையா இருந்தது இதுல என் கதை உன் கதைன்னு பிரச்சனை வேற? என்று நெட்டிசன்கள் வலைதளத்தில் கலாய்த்து வருகின்றனர்.