சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

ராஜ மவுலி செல்ல பிள்ளைக்கு டூப் போட இவ்வளவு சம்பளமா.? ஒரே படத்தால் மொத்தத்தையும் இழந்த தயாரிப்பாளர்

Actor Prabhas stunt double salary details in salaar movie: சினிமாவில் முன்னணியில் இருக்கும் நட்சத்திரங்களுக்கு பின்னால் இருந்து சப்போர்ட் பண்ணும் ஆர்டிஸ்ட்களின் திறமை வெளி காட்டப்படுவதில்லை. தற்போது முன்னணி நடிகரின் ஸ்டண்ட் டபுள் ஆக இருப்பவர் ஹீரோக்கு நிகரான சம்பளத்தை வாங்கி அனைவரையும்  வாயடைக்க  வைத்துள்ளார்.  யார் அந்த ஸ்டண்ட் டபுள்?

எங்கேயும் எப்போதும் போன்று நிலையில்லாத உலகில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பரபரப்புடன் பயணிக்கும் நிலையில் எதிர்பாராமல் நடக்கும் விபத்துகளை தவிர்ப்பதற்காக சினிமாவில் ஸ்டன்ட் கலைஞர்கள் முன்னணி நடிகர்களுக்கு டூப் போடும் பழக்கத்தை வைத்துள்ளனர்.

ராஜமவுலியின் பாகுபலி 1 மற்றும் 2க்கு பின் இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரையும் தன் பால் என்ன ஈர்த்தவர் நடிகர் பிரபாஸ். தொடர்ந்து ஆதி புரூஷ்,சகோ போன்ற பெரிய பட்ஜெட் படங்களையே நடித்து வந்தார். தற்போது ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் இவர் நடிப்பில் வெளிவந்திருக்கும் சலார் படம் தமிழ்நாட்டைத் தவிர மற்ற மொழிகளில் சக்கை போடு போட்டவுடன் வசூலை வாரி குவித்தது.

Also read: ஃபுல் போதையில் தான் கதை எழுதுவேன்.. ராஜமவுலி போல் கொண்டாடிடும் டைரக்டரின் தலைக்கணம்

திரையில் இவரது அசாத்திய திறமையை கண்டு ரசிகர்கள் பிரமித்து போனார்கள். அந்த அளவு 7 அடி அசுரனான இவர் சண்டைக் காட்சிகளில் மிரட்டி எடுத்து இருப்பார். கட்டுமஸ்தான உடம்புடன் பல சாகசங்களை செய்யும் பிரபாஸுக்கு பின்னால் இருக்கும் அவரது ஸ்டண்ட் டபுள் ஒரு நாளைக்கு 20 முதல் 30 லட்சம் வரை சம்பளம் பெறுகின்றார்.

ஒரு படத்திற்கு எப்படியும் 30 நாள்கள் வரை இவர்களின் தேவை ஏற்படுவதால் படத்திற்கு ஒன்பது முதல் 10 கோடி வரை சம்பளம் வாங்குகிறார்கள். சில நடிகர்கள் கூட இந்த அளவிற்கு சம்பளம் வாங்காத நிலையில் இவர்களின் சம்பளம்  திரைத்துறைக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளது.  ரிஸ்க் அதிகமா இருந்தா சம்பளம் அதிகமாக தானே இருக்கும்.

மக்கள் ஆக்சன் படங்களை தான் விரும்பி பார்க்கிறார்கள். வசூலை வாரிக் குவிக்கும் நோக்கோடு படத்திற்கு படம் வித்தியாசமான ஸ்டண்ட் காட்சிகளை அரங்கேற்றி  வருகின்றனர். கிட்டதட்ட சலார் படத்துக்கு மட்டும் 20 நாட்கள் டூப் போட்டு உள்ளனர் இதற்கு  4 கோடி வரை கொடுத்துள்ளது  ஹோம்பாலே பிலிம்ஸ். பிரபாஸ் மூலம் அவரது ஸ்டண்ட் டபுள் களும் ஆதாயம் அடைகின்றனர் தற்போது பிரபாஸ் நடிப்பில் “கல்கி” மற்றும் “தி ராஜா சாப்” போன்ற படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கின்றன.

Also read: சலார் ஓடிடி ரிலீஸ் தேதி.. பாகுபலிக்கு பின் ஹிட் கொடுக்க முடியாமல் திணறும் பிரபாஸ்

Trending News