1. Home
  2. கோலிவுட்

ஹாலிவுட் லெவலில் விடாமுயற்சி செய்யும் சம்பவம்.. புதிய லுக்கில் ட்ரெண்டாகும் அஜித்தின் புகைப்படம்

ஹாலிவுட் லெவலில் விடாமுயற்சி செய்யும் சம்பவம்.. புதிய லுக்கில் ட்ரெண்டாகும் அஜித்தின் புகைப்படம்
ஹாலிவுட் லுக்கில் அஜித்தின் வைரல் புகைப்படம்

Actor Ajith New look photos: துணிவு படத்திற்கு பிறகு அஜித் அடுத்ததாக மகிழ்திருமேனி இயக்கத்தில் லைக்கா தயாரிப்பில் விடாமுயற்சி படத்தில் நடிக்கிறார். இது எப்போது முடிந்திருக்க வேண்டும். ஆனால் ஒரு வருடமாகவே இழுத்தடித்துக் கொண்டிருக்கின்றனர். இப்போது படத்தை சீக்கிரமே முடித்து ரிலீஸ் வேண்டும் என்ற முடிவில் படக்குழு இருக்கிறது.

இதன் ஷூட்டிங் தற்போது அஜர்பைஜான் நாட்டில் தீவிரமாக நடைபெறுகிறது. இதில் பங்கேற்றுள்ள அஜித், அங்கு ரசிகர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை தினமும் சோசியல் மீடியாவில் வெளியாகி ட்ரெண்டாக்குகிறார். இந்த புகைப்படங்கள் எல்லாம் தல ரசிகர்களை ஆரவாரப்படுத்துகிறது.

அதிலும் இப்போது அஜித், ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஷெல்பி அவர்களின் லுக்கில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்தை பார்த்த பிறகு நிச்சயம் விடாமுயற்சியில் அஜித் தரமான சம்பவத்தை செய்யப் போகிறார் என்று ரசிகர்களின் எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.

புதிய லுக்கில் அஜித்

ஹாலிவுட் லெவலில் விடாமுயற்சி செய்யும் சம்பவம்.. புதிய லுக்கில் ட்ரெண்டாகும் அஜித்தின் புகைப்படம்
ajith-recent-look-cinemapettai

ஹாலிவுட் லுக்கில் அஜித்தின் வைரல் புகைப்படம்

அஜித்தின் இந்த புது லுக் புகைப்படம் இப்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகிறது. இதில் ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஷெல்பி அணிந்திருக்கும் கேப் மற்றும் கோட் சூட் உடன் அவரைப் போலவே தெரிகிறார். ஹாலிவுட்டில் இவர் நடிக்கும் பல கதாபாத்திரங்கள் நிஜ வாழ்க்கை வரலாற்று நபர்களை அடிப்படையாகக் கொண்டவை.

அதேபோன்று விடாமுயற்சி படத்திலும் அஜித்தின் கதாபாத்திரம் இருக்குமோ! என்றும் ரசிகர்கள் யூகிக்கின்றனர். எது எப்படியோ விடாமுயற்சி படம் தல ரசிகர்களுக்கு செம ட்ரீட்டாக இருக்கப் போகிறது என்பது அஜித்தின் லுக்கை பார்த்ததுமே கன்ஃபார்ம் செய்து விட்டனர்.

ஹாலிவுட் நடிகர் தாமஸ் ஷெல்பி லுக்கில் அஜித்

ஹாலிவுட் லெவலில் விடாமுயற்சி செய்யும் சம்பவம்.. புதிய லுக்கில் ட்ரெண்டாகும் அஜித்தின் புகைப்படம்
ajith-new-look-1-cinemapettai
Cinemapettai Team
Arun

சினிமாபேட்டை - தமிழ் சினிமா செய்திகள், விமர்சனங்கள் மற்றும் புதுப்பிப்புகளை வழங்கும் முன்னணி ஊடகம்.