திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

டாப் ஹீரோக்கள் மூன்று வேடங்களில் நடித்தும் ஓடாத 5 படங்கள்.. லாஜிக்கில் கோட்ட விட்ட சூர்யா

Top Actors 5 movies with triple roles that didn’t work: முன்னணி நடிகர்கள் தங்களுடைய நடிப்பில் வித்தியாசம் காட்ட வேண்டும் என ஒரே படத்தில் நிறைய கெட்டப்பில் நடித்து ரசிகர்களை பரவசமூட்ட நினைப்பார்கள். அப்படி தான் முக்கியமான ஐந்து ஹீரோக்கள் மூன்று கெட்டப்பில் நடித்த படங்கள் எதுவும் சரியாக ஓடாமல் போனது.

சிவாஜி: 1962 இல் செவாலியர் சிவாஜி கணேசன் மூன்று வேடங்களில் நடித்த நகைச்சுவை திரைப்படம் தான் பலே பாண்டியா. இந்த படத்தில் பாண்டியா, மருது, சங்கர் என்ற மூன்று வேடங்களில் சிவாஜி நடித்து அசத்தினார். அதேபோல் இதில் ராதாவும் இரட்டை வேடத்தில் நடித்து சிவாஜிக்கு டஃப் கொடுத்தார். பக்கா காமெடி ஜானரில் உருவான இந்த படம் ரசிகர்களிடம் எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்காமல் வசூலில் மண்ணை கவ்வியது.

விஜயகாந்த்: ஈஸ்வரன் இயக்கத்தில் விஜயகாந்த், குஷ்பூ, ராதாரவி, அம்பிகா, செந்தில் ஆகியோர் இணைந்து நடித்த படம் தான் சிம்மாசனம். இந்த படத்தில் விஜயகாந்த் தந்தையாக சத்தியமூர்த்தி மற்றும் இரண்டு மகன்கள் ஆக சக்திவேல், தங்கராசு என மூன்று கெட்டப்பில் நடித்தார். இதில் ஏழைகளுக்கு பல உதவிகளை செய்த சத்தியமூர்த்தியை ஜமீன்தார் தம்பிதுரை கொலை செய்துவிட்டு அந்த பழியை சத்தியமூர்த்தியின் இரண்டாவது மனைவியின் மீது போட்டு விடுவார்.

கடைசியில் சத்தியமூர்த்தியின் இரண்டு மகன்கள் ஆன சக்திவேல் மற்றும் தங்கராசு இருவரும் அந்த உண்மையை கண்டுபிடிப்பது தான் இந்த படத்தின் கதை. என்னதான் இதில் கேப்டன் மூன்று வேடங்களில் நடித்திருந்தாலும், சிம்மாசனம் படத்திற்கு ரசிகர்களின் மத்தியில் போதிய வரவேற்பு கிடைக்காமல் போனது.

Also Read: காட்டுத் தீ போல் பரவும் தளபதி 69 போஸ்டர்.. ரஜினி பட இயக்குனருடன் கூட்டணி போடும் விஜய்

டாப் ஹீரோக்கள் மூன்று கெட்டப்பில் நடித்த ஐந்து படங்கள்

சரத்குமார்: அய்யா, அப்பா, மகன் என மூன்று பேராகவும் சரத்குமார் கெட்டப் போட்டு நடித்த படம் தான் நம்ம அண்ணாச்சி. இதில் அய்யா, அண்ணாச்சி, பிரபாகரன் என்ற மூன்று கேரக்டர்களும் சரத்குமார் தான் நடித்தார். ஒரே நபர் மூன்று தலைமுறைகளின் நடிப்பை வித்தியாசப்படுத்தி காட்டுவது அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல.

ஆனால் அதை இந்த படத்தில் சரத்குமார் சிறப்பாக செய்தார். இருந்தாலும் இந்த படத்தின் கதை வழக்கமான அரசியல்வாதி மற்றும் ஏழை எளியவர்களுக்கு உதவி செய்யக்கூடிய பிதாமகனுக்கும் இடையிலான மோதல்தான். இதனால் அரைச்ச மாவையே அரைத்ததால் இந்த படத்திற்கு போதிய வரவேற்பு கிடைக்காமல் படு தோல்வி அடைந்தது.

சத்யராஜ்: தமிழ் சினிமாவில் வில்லனாக நடித்து அதன்பின் ஹீரோவாக பட்டைய கிளப்பியவர் தான் நடிகர் சத்யராஜ். இவர் எழுதி இயக்கி நடித்த ‘வில்லாதி வில்லன்’ படத்தில் மூன்று கெட்டப்பில் நடித்தார். அதிலும் ஒரு கண்ணில் பூ விழுந்தது போல் ‘பூ கண்ணன்’ ஆகவும், ‘எடிசன்’, ‘மீனாட்சி சுந்தர சாஸ்திரி’யாராகவும்  கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத மூன்று வித்தியாசமான கதாபாத்திரத்தில் சத்யராஜ் இதில் நடித்து அசத்தினார். என்னதான் இதற்கு சத்யராஜ் ரொம்பவே மெனக்கெட்டாலும் இந்த படம் தியேட்டரில் சரியாக ஓடாமல் போனது. 

சூர்யா: நடிப்பு அரக்கனான சூர்யா வில்லன், ஹீரோ என மூன்று வேடத்தில் நடித்த படம் 24. டைம் டிராவல் கதையை மையமாக வைத்து சயின்டிபிக் பிக்சன் கதையாக இந்த படம் உருவானது. சமீப காலமாகவே டைம் டிராவல் படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. ஆனால் சூர்யாவின் 24 திரைப்படத்தில் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகளை ரசிகர்கள் கண்டுபிடித்து கழுவி கழுவி ஊற்றினார்கள்.

Also Read: லியோ போல் அசிங்கப்பட முடியாது.. 2000 ஆர்டிஸ்ட்டுகளுக்கு கங்குவா டீம் செய்த வேலை

Trending News