வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

மினிமம் கேரண்டி சக்சஸ் ஹீரோன்னு பேர் வாங்கிய அசோக் செல்வனின் 6 படங்கள்.. சர்ச்சையில் சிக்கிய சபாநாயகன்

Actor Ashok selvan’s 6 Feel Good Movies: திரைப்படங்களில் எந்த ஒரு ஆரவாரமும் இல்லாமல் பக்கத்து வீட்டு இளைஞன் போல் தன் இயல்பான நடிப்பினால் எல்லா தரப்பினரையும் கொண்டாட வைப்பவர் அசோக் செல்வன். அமைதியான அமுல் பாய் போல் இருக்கும் அசோக் செல்வன் தன்னை விமர்சிப்பவர்களுக்குதரமான பதிலடி கொடுக்கவும் தவற மாட்டார்.  குறிப்பிட்ட கதை அம்சம் கொண்ட திரைக்கதைகளை மட்டுமே  தேர்ந்தெடுத்து நடிக்கும் அசோக் செல்வன் நடித்த 6 ஹிட் படங்களை காணலாம்,

தெகிடி: சூது கவ்வும் படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமான அசோக் செல்வனுக்கு ஹீரோ அந்தஸ்து கொடுத்த திரைப்படம் தெகிடி.  துப்பறிவாளனாக விறுவிறுப்பான திருப்பங்களுடன் திரை கதையை தூக்கி நிறுத்தி இருந்தார் அசோக் செல்வன்.

ஓ மை கடவுளே: நூடுல்ஸ் மண்டை என்று சொல்லி  தோழியை கலாய்க்கும் அசோக் செல்வன்,  கணவன் ஆனவுடன் உனக்கு இந்த ஹர்லிகர் ரொம்ப அழகா இருக்கு என்று உருகுவது நம்மை அறியாமல்  சிறு புன்னகைஉடன் ரசிக்க வைத்து விடுகிறார். காதலில்  நன்றாக சொதப்பியதன் மூலம் ரசிகர்களிடையே ஸ்கோர் செய்தார் அசோக் செல்வன்.

Also read: முதல் படத்திலேயே முத்திரை பதித்த 5 இயக்குனர்கள்.. ஆடியன்ஸ்களை மிரள வைத்த போர் தொழில்

போர் தொழில்: கடந்த ஆண்டு வெளியான போர் தொழில் அசோக் செல்வனின் சினிமா கேரியரில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.  புத்தக புழுவான காவல்துறை அதிகாரியாக  தான் கற்ற வித்தை அனைத்தையும் ஒரு சேர இறக்கி இருந்தார் அசோக் செல்வன்.  போர்த்தொழில் போர் அடிக்காமல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

நித்தம் ஒரு வானம்: அறிமுக இயக்குனர் ரா கார்த்திக்கின் இயக்கத்தில் பீல் குட் மூவியாக உணர வைத்தது நித்தம் ஒரு வானம்.  ஒரே படத்தில் மூன்று வெவ்வேறு கேரக்டர்களுக்கு உண்டான உணர்வை வெளிப்படுத்தி  தன் திறமையை நிரூபித்து இருந்தார் அசோக் செல்வன். மன அழுத்தத்தையும், அதிலிருந்து மீள்வதற்கான வழியையும் கூறி ரசிகர்களின் மனதை வென்றிருந்தார் அசோக் செல்வன்.

சபாநாயகன்:  இப்படத்தில் பள்ளி காதல், கல்லூரி காதல் என காதலுக்கு வரைமுறை இல்லாமல் காதலுடன் சாக்லேட் பாயாக நடித்திருந்தார் அசோக் செல்வன். இவருக்குள் இத்தனை திறமைகளா என்று ரசிகர்கள் வியக்கும் வண்ணம் காமெடி பிளஸ் ரொமான்ஸ் வித் டான்ஸ் என அனைத்தையும் ஒரு சேர வெளிப்படுத்தி காதலை உணர வைத்தார் அசோக். மூன்று நாயகிகள் உடன் கேப் இல்லாமல் நெருக்கமாக நடித்தீர்களாமே  அசோக் செல்வன்? என்ற நிருபரின் கேள்விக்கு நெருக்கமாக இருக்கும்போது எதுக்கு சார் கேப்? என்று நிருபரை அசர வைத்தார்

ப்ளூ ஸ்டார்:  சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ப்ளூ ஸ்டார் அசோக் செல்வனின் ரியல் லைஃப் ரியல் லைஃப் இரண்டிலுமே  மாற்றத்தை ஏற்படுத்திய திரைப்படமாகும்.  எந்த சர்ச்சையிலும் சிக்காமல் முரட்டு சிங்கலான அசோக் செல்வன் இப்படத்தின் மூலம் கீர்த்தியை கைப்பிடித்தவுடன் நேர்மறையான விமர்சனங்களை பெற்று ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.

Also read: அசோக் செல்வன் மனைவி கீர்த்தி பாண்டியனின் சொத்து மதிப்பு.. தன்னம்பிக்கையால் சாதித்த நடிகை

Trending News