திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

இயக்குனராக களம் கண்ட ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 4 படைப்புகள்.. அட! பாட்டு, டப்பிங் என கலக்கி இருக்காங்களே

Aishwarya Rajinikanth Directorial Movies: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மூன்று தலைமுறைகளாக தன்னுடைய ஸ்டைலான நடிப்பின் மூலம் நம்பர் ஒன் இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். அவருடைய மகள்கள் நினைத்து இருந்தால் அப்பாவின் பெயரை வைத்தே சினிமாவில் கதாநாயகிகளாக களமிறங்கி இருக்கலாம். ஆனால் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் இருவருமே திரைக்குப் பின்னால் இருந்து வேலை செய்வதையே இன்று வரை முழு ஈடுபாடுடன் செய்து வருகிறார்கள்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷ் உடன் ஆன திருமணத்திற்கு பிறகு தான் இயக்குனராக தன்னுடைய கலைப்பயணத்தை தொடங்கினார் என பலருக்கும் தெரியும். ஆனால் அதற்கு முன்பே அவர் சினிமாவில் காலடி எடுத்து வைத்து விட்டார். கடந்த 2002 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த பாபா படத்திற்காக அவருக்கு ஆடை வடிவமைத்தது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் தான். அதைத் தொடர்ந்து சினிமாவில் அவர் தன்னால் முடிந்த நிறைய விஷயங்களை செய்திருக்கிறார்.

இயக்குனர் செல்வராகவன் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன் படத்தில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உதவி இயக்குனராக பணிபுரிந்தது எல்லோருக்குமே தெரிந்த விஷயம் தான். அதே படத்தில் உன் மேல ஆசைதான் என்று தொடங்கும் பாடலை தனுஷ் மற்றும் ஆண்ட்ரியா உடன் இணைந்து ஐஸ்வர்யா பாடியிருக்கிறார். அதேபோன்று அந்த படத்தில் ரீமா சென்னுக்கு பின்னணி குரல் கொடுத்தது ஐஸ்வர்யா தான். இந்த படத்தில் ரீமா சென் பேசும் வசனங்கள் படத்திற்கு முக்கியமான ஹைலைட்டாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read:எங்க அப்பா சங்கியா!. லால் சலாம் ஆடியோ வெளியீட்டு விழாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தின் அதிரடி பேச்சு

அதேபோன்று விசில் என்னும் திகில் திரைப்படத்திலும் நட்பே நட்பே என்னும் பாடலை நடிகர் சிலம்பரசன் உடன் இணைந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பாடி இருக்கிறார். ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் கூட ஒரு சில தமிழ் படங்களில் பின்னணி பாடல் பாடி இருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படி கலை துறையில் பணிபுரிந்து கொண்டிருந்த ஐஸ்வர்யா இயக்குனராவதை மட்டுமே தன்னுடைய குறிக்கோளாக எடுத்துக்கொண்டு அந்தத் துறையில் நுழைந்தார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் 4 படைப்புகள்

கடந்த 2012 ஆம் ஆண்டு 3 படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இந்த படத்தில் அமைந்த ஒய் திஸ் கொலவெறி பாடல் உலக அளவில் ட்ரெண்டானது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் இந்த படம் ரீலீஸ் செய்யப்பட்டு 2கே கிட்ஸ்களால் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடப்பட்டது. இதைத் தொடர்ந்து கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்த் இருவரது நடிப்பில் வை ராஜா வை என்னும் படத்தை இயக்கினார்.

இந்த படங்களை தொடர்ந்து சினிமா வீரன் என்னும் டாக்குமென்டரி படத்தையும் இயக்கி இருக்கிறார். தனுஷ் உடன் ஆன திருமண முடிவுக்குப் பிறகு ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விக்ராந்த் மற்றும் விஷ்ணு விஷாலை வைத்து லால் சலாம் என்னும் விளையாட்டு சம்பந்தப்பட்ட படத்தை இயக்கியிருக்கிறார். இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் கபில்தேவ் முக்கிய கேரக்டர்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read:வேட்டையனுக்குப் பின் ரஜினி வைக்கும் பொறி.. கெத்து காட்டும் சூப்பர் ஸ்டார்

Trending News