Actor Vijay is planned to start his party and to enter into politics: “அந்த இடம்! இந்த இடம்! எந்த இடத்திலும் ஐயா கில்லி டா!” என்று சினிமாவில் வசனம் பேசியது போலவே, அரசியல், சினிமா இரண்டையும் விட்டுக் கொடுக்காமல் கில்லியாக தனி பெரும்பான்மையுடன் முன்னணியில் இருக்கவே பேராசை கொண்டுள்ளார் தளபதி விஜய்.
வருகின்ற லோக்சபா தேர்தலை கருத்தில் கொண்டு திராவிட கட்சிகள் மற்றும் மக்கள் நீதி மையம் சீமான் கட்சி என பலரும் அறிக்கைகள் தயார் செய்து கூட்டணி அமைக்க திட்டம் போட்டு வருகின்ற நிலையில், “வந்தா ராஜாவாகத்தான் வருவேன்” என்பது போல் விஜய்யும் களத்தில் இறங்க உள்ளார் இதற்கென சென்னையை அடுத்த பனையூரில் பல்வேறு தொகுதி நிர்வாகிகளை சந்தித்து உள்ளார்.
விஜய் தனது அரசியல் பிரவேசத்தை உறுதி செய்யும் வண்ணம் விஜய் மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக உருமாற்றும் பொருட்டு கட்சியின் பெயர், கொடி, சின்னம், என கட்சியை பதிவு செய்வதற்கான வேலைகள் அனைத்தையும் பற்றி கலந்துரையாடினாராம்.
விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகள் அனைவரும் ஒருமனதாக விஜய் தலைவராகவும் கூட்டணி குறித்து முடிவு செய்யும் அதிகாரத்தை அவருக்கே வழங்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது. யாரும் எதிர்பாக்காத வகையில் விஜய் நிர்வாகிகள் அனைவரிடமும் 20 ரூபாய் வெற்றுப் பத்திரத்தில் கையெழுத்து வாங்கி உள்ளாராம். என்ன ஒரு ராஜதந்திரம்!
மேலும் G.O.A.T படம் முடியும் வரை அனைவரையும் கப்பிச்சிப்புன்னு இருக்க சொல்லி இருக்கிறார். எல்லோரிடமும் விஜய் மக்கள் இயக்கம் விரைவில் அரசியல் கட்சியாக மாற்றப்படுவது உறுதி என்றும் அப்போது இந்த பத்திரத்தில் விஜய்யின் கட்டளை எழுதப்படும் என்றும் வாக்குறுதி அளித்து உள்ளாராம்.
சினிமாவில் இருந்து அரசியலுக்கு வருவதால் என்னவோ பல தரமான சம்பவங்களை செய்து வருகிறார் விஜய். வாழ்க தமிழக முன்னேற்ற கழகம்! வளர்க விஜய் மக்கள் இயக்கம்! என விஜய்யின் அரசியல் வருகை அவரது ரசிகர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது மேலும் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக உருவெடுக்கும் “விஜய் மக்கள் இயக்கம்” மக்களுக்கு நல்லது செய்தால் சரிதான்.
Also read: இங்கிலீஷ் டைட்டில் வச்சா இப்படித்தான் சிக்குவீங்க! விஜய் தலையில் இடியை இறக்கிய வெங்கட் பிரபு