Bhavatharini’s Husband: இந்த வருட ஆரம்பமே மிகவும் சோகம் நிறைந்ததாக அமைந்துவிட்டது. கடந்த வருட இறுதியில் விஜயகாந்த் மறைந்தது இன்னும் நம்மை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த நிலையில் இளையராஜா மகள் பவதாரணியின் மரணமும் வேதனையை தந்துள்ளது.
புற்றுநோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பவதாரணி சில தினங்களுக்கு முன்பு நம்மை விட்டு சென்றார். அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகமும் திரண்டு வந்து இறுதி அஞ்சலியை செலுத்தியது. இந்நிலையில் பவதாரணியின் திருமண வாழ்வு எப்படி இருந்தது என்ற தகவல்கள் கசிந்துள்ளது.
இளையராஜா தன் அன்பு மகளுக்கு கடந்த 2005 ஆம் ஆண்டு சபரி ராஜ் என்பவரை ஆசை ஆசையாய் திருமணம் செய்து வைத்தார். இவர் மிகப்பெரும் விளம்பர நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். இவர்களுடைய திருமணம் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் கோலாகலமாக நடைபெற்றது.
மனம் ஒத்த தம்பதிகளாக வாழ்ந்து வந்த இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. சமீபத்தில் தான் பவதாரணிக்கு இப்படி ஒரு பிரச்சனை இருப்பது குடும்பத்தினருக்கு தெரிய வந்திருக்கிறது. அதுவும் காலம் கடந்து விட்டது என்பது குடும்பத்திற்கே பேரிடியாக அமைந்திருக்கிறது.
கணவருடன் பவதாரணி

ஆனாலும் சபரி ராஜ் தன் மனைவியை காப்பாற்ற இறுதிவரை போராடி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் இப்படி ஒரு பிரச்சனை இருப்பதை பவதாரணிக்கு கடைசி வரை தெரியாமலும் பார்த்துக் கொண்டிருக்கிறார். ஆனாலும் அவரால் தன் மனைவியை காப்பாற்ற முடியவில்லை.
கிட்டத்தட்ட 18 ஆண்டுகாலம் சிறப்பாக சென்ற இவர்களின் திருமண வாழ்வு தற்போது சோகத்தில் முடிந்துள்ளது. மேலும் பவதாரணியின் இறுதி சடங்கின் போது அவருடைய கணவர் தேம்பித் தேம்பி அழுத நிகழ்வு பலரையும் கலங்க வைத்தது. தற்போது இந்த துயரத்திலிருந்து அவர்கள் மீண்டு வர வேண்டும் என்பதே ரசிகர்களின் பிரார்த்தனையாக இருக்கிறது.