சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

யாரும் எதிர்பாக்காத படத்தில் நடிக்கும் சீமான்.. இது இவர் அரசியலுக்கு முக்கியமான படமாக இருக்கும்

Seeman in prominent role in Director Vignesh shivan movie LIC; இயக்குனர் விக்னேஷ் சிவன் காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திற்குப் பின் ஒரு நீண்ட இடைவேளை எடுத்து எல் ஐ சி எனப்படும் லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் என்கிற திரைப்படத்தை இயக்கி வருகிறார் பல்வேறு போராட்டங்களுக்குப் பின் ஈஷா மையத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கப்பட்டது.

படத்தின் ஆரம்பம் முதலே பல சர்ச்சைகளுக்கு உள்ளான விக்னேஷ் சிவன் படத்திற்கான டைட்டிலை மாற்றினாரா என்று தெரியவில்லை ஆனால் படப்பிடிப்பு துவங்கப்பட்டு விட்டது. பிரதீப் ரங்கநாதன், நயன்தாரா, கீர்த்தி செட்டி, எஸ் ஜே சூர்யா போன்ற முன்னணி நட்சதிரங்கள்  நடிக்க உள்ளனர். படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க  நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஒப்பந்தமாகியுள்ளார்.

அரசியல் வட்டத்தில் அனல் பறக்கும் பேச்சை தெறிக்க விடும் சீமான், நீண்ட இடைவேளை பின் இப்படத்தில் நடிப்பது அனைவரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. நாடாளுமன்ற தேர்தல் வரப்போகிறது இந்த சமயத்தில் இவர் ஏன் இந்த படத்தில் ஒப்புக்கொண்டு நடிக்கிறார் என்ற கேள்வி சினிமா பிரபலங்கள் முதல் அரசியல் தலைவர்கள் வரை அனைவரின் கவனிப்புக்கும் உள்ளாக்கியுள்ளது.

Also read: நாலா பக்கமும் ஏழரை சனியால் முழிக்கும் விக்னேஷ் சிவன்.. டைட்டிலுக்கு போடும் சண்டை

தலைப்பு எல்ஐசி தான் என்றாலும் இப்படத்திற்கான கரு விவசாயம் சார்ந்த இருப்பதாகவும், இயற்கை விவசாயத்தை விரும்பும் பூமர் அப்பாவுக்கும் செயற்கை விவசாயம் மூலம் முன்னேற துடிக்கும் ட்ரெண்டிங் சன்னுக்கும் இடையே உள்ள போராட்டமே எல்ஐசி.

சீமான் இயற்கை விவசாயத்தை ஆதரிக்கும் தந்தையாகவும் பிரதீப் மற்றும்  நயன்தாரா இவரின் பிள்ளைகளாகவும் நடிக்க உள்ளனர். நான் எட்டு வழிச்சாலையில் பயணிக்க மாட்டேன், ஒத்தையடி பாதையில் தான் செல்வேன், என் வழி தனி வழி, யாருடனும் கூட்டணி சேர மாட்டேன், நான் ஆட்சிக்கு வந்தால் சிஎஸ்கே யில் அனைவரும் தமிழனாக தான் இருப்பார்கள் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வாக்குறுதி அளிக்கும் சீமான் காரணம் இல்லாமல் இப்படத்தில் நடிக்கவில்லை.

இப்படத்தின் மூலம் நாடாளுமன்ற தேர்தலிலும் வரும் காலத்திலும் தனக்கு ஏற்படும் நற்பயிரை தக்க வைத்துக் கொள்ளும் எண்ணத்துடணும், பிளஸ் இது நல்ல கதை இதன் மூலம் தனக்கு ஏற்பட போகும் இமேஜ் பிற்காலத்தில் தனது அரசியல் கட்சிகளின் பணிகளுக்கு மற்றும் தேர்தல் காலத்திலும் உதவும் என்ற முற்போக்கு சிந்தனையுடன் நடிக்க உள்ளார் சீமான்.

ஈஷா மையத்தில்  படப்பிடிப்பு துவங்கப்பட்டதற்கான அப்டேட்டையும் புகைப்படங்களையும் தனது வலைதளத்தில் பகிர்ந்து உள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.  ஏதோ சொல்றீங்க இயற்கை விவசாயம் செழித்து தமிழக மக்களுக்கு நல்லது நடந்தா சரிதான்.

Also read: பல நூறு கோடி சம்பளம், அனிருத்தின் அடுத்தடுத்த வெளிவர உள்ள 13 படங்கள்.. 2024-25 கிங் மேக்கர் நான்தான்

- Advertisement -spot_img

Trending News