வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

சரியான நேரத்தில் களம் இறங்கும் தளபதி விஜய்.. இத மட்டும் பாலோ பண்ணா சி.எம் சீட் கன்ஃபார்ம்

Thalapathy Vijay: இந்தியாவை பொருத்தவரைக்கும் சினிமா மற்றும் அரசியலை இரண்டாகப் பிரிக்க முடியாது. இரண்டுமே ஒட்டி பிறந்த இரட்டை சகோதரிகள் போலத்தான். ஒரு ஹீரோ மிகப்பெரிய அளவில் பெயர் வாங்கி விட்டால் அவருடைய அடுத்த நகர்வு அரசியலாக தான் இருக்கும் என்பதை அவருடைய ரசிகர்களை முடிவு செய்து விடுவார்கள். ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்பு வரை விஜய் ரசிகர்களை கேட்டிருந்தால் எங்கள் தலைவனுக்கு அப்படி ஒரு எண்ணமே கிடையாது என்று சொல்லி இருப்பார்கள்.

நடிகர் விஜய் அவருடைய ரசிகர்கள் அழைக்காமலேயே அரசியலைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். தங்களுடைய தலைவனின் ஆசை இதுதான் என்றால் கண்டிப்பாக அதற்கும் நாங்கள் தோள் கொடுத்து நிற்கிறோம் என அவருடைய ரசிகர்களும் தயாராகி விட்டார்கள். இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே விஜய் அரசியலுக்கு வரப்போகிறார் என்ற விஷயம் அரசல் புரசலாக பேசப்பட்டது. தற்போது அரசியல் கட்சியை ரெஜிஸ்டர் செய்யும் அளவுக்கு இந்த நகர்வு முன்னேறி இருக்கிறது.

தமிழ்நாட்டில் சினிமாவில் இருந்து வந்த எம் ஜி ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு பிறகு யாருமே எதிர்பார்த்த வெற்றியை அரசியலில் பெறவில்லை. அப்படி ஒரு நிலைமை விஜய்க்கு ஏற்பட்டு விடுமோ என்ற தயக்கம் அவருடைய ரசிகர்களுக்கும் அதிகமாகவே இருக்கிறது. இருந்தாலும் விஜய் மற்றும் அவருடைய மக்கள் இயக்க நிர்வாகிகள் அடுத்தடுத்து எடுத்து வைக்கும் நகர்வு கண்டிப்பாக வெற்றி என்பதை பெற்றுத் தரும் என்பதில் விஜய் ரசிகர்களுக்கு எந்த சந்தேகமும் இல்லை.

Also Read:சைலன்ட் மோடில் இருக்கும் விஜய், சூர்யா.. சொன்னதை நிறைவேற்றிய ரஜினியின் சிஷ்யன்

நடிகர் விஜய் அரசியல் அறிவிப்புக்கு முன்னரே சமூகப் பணியை கையில் எடுத்திருக்கிறார். இந்த விஷயம் தான் அவருக்கு இப்போது மிகப்பெரிய பாசிட்டிவாக அமைந்துவிட்டது. விஜய் இது போன்ற ஒரு நகர்வை புதிதாக செய்கிறாரா என்று யோசித்துப் பார்த்தால் கிடையாது. அரசியலுக்கு முன்பே சமூகப் பணியை ஆரம்பித்தவர் கேப்டன் விஜயகாந்த். அவருடைய அரசியல் பாதையை தான் இப்போது விஜய் ஃபாலோ செய்து கொண்டிருக்கிறார்.

சரியான நேரத்தில் களம் இறங்கும் தளபதி விஜய்

கேப்டன் விஜயகாந்தின் மரணம் என்பது தமிழக அரசியலில் ஒரு சிறிய வெற்றிடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இதை விஜய் சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் கண்டிப்பாக கேப்டனின் ஆதரவாளர்கள் அத்தனை பேரும் விஜய் பக்கம் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது. விஜயகாந்துக்கு பிறகு தமிழக மக்களுக்கு அதிக அளவில் சமீபத்தில் உதவி செய்து வருவது விஜய் மட்டும் தான். இதனாலேயே அவர் விஜயகாந்த் வழியில் தன் அரசியல் பாதையை தொடங்குகிறார் என பெரிதாக பேசப்படுகிறது.

மறைந்த கேப்டன் விஜயகாந்த் தொடங்கிய தேமுதிக கட்சி தமிழகத்தில் குறைந்த சில நாட்களிலேயே பெரிய கட்சியாக உருவெடுத்தது யாரும் மறக்க முடியாது. ஒருவேளை விஜயகாந்தின் உடல்நிலை சரியாக இருந்திருந்தால் ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு விஜயகாந்த் முதலமைச்சராக கூட ஆகியிருக்கலாம். கேப்டன் பாதையை சரியாக பயன்படுத்தி விஜய் பயணித்தால் சிஎம் சீட் கன்ஃபார்ம் என தற்போது பேசப்பட்டு வருகிறது.

Also Read:விஜய் வைத்து பழிக்கு பழி சம்பவம் செய்ய போகும் ரஜினி.. யாருமே எதிர்பார்க்காத அரசியல் ஆட்டம்

- Advertisement -spot_img

Trending News