ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ப்ளூ ஸ்டார்-ஐ விட 5 மடங்கு நஷ்டமான ஆர்ஜே பாலாஜி.. சம்பளத்தை அதிகரிக்க போடும் டிராமா

Blue Star and Singapore Saloon: அசோக் செல்வன் நடிப்பில் ப்ளூ ஸ்டார் படமும், ஆர் ஜே பாலாஜி நடிப்பில் சிங்கப்பூர் சலூன் படமும் குடியரசு தினத்தை முன்னிட்டு அனைத்து திரையரங்களிலும் வெளிவந்தது. சின்ன பட்ஜெட் படங்களாக இருந்தாலும் பரவாயில்லை கதை நன்றாக இருந்தால் பார்த்து ரசிப்போம் என மக்கள் தற்போது தொடர்ந்து நல்ல படங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.

அந்த வகையில் இந்த இரண்டு படங்களும் வெற்றி பெற்றதா என்று கேட்டால் கேள்வி குறிதான். அதாவது ப்ளூ ஸ்டார் படத்தை எடுப்பதற்கு கிட்டத்தட்ட 7 கோடி பட்ஜெட் செலவாகி இருக்கிறது. ஆனால் படம் வெளிவந்து ஒரு வாரம் தாண்டிய நிலையில் இன்னும் போட்ட பணத்தை கூட எடுக்க முடியாமல் தவித்து வருகிறது.

இந்நிலையில் படம் வெற்றி பெற்றது என்று அவர்களே ஒரு முடிவு பண்ணி சக்சஸ் மீட் பண்ணும் அளவிற்கு போய்விட்டார்கள். இதாவது பரவாயில்லை இந்த படத்தைவிட ஆர் ஜே பாலாஜி நடிப்பில் வெளிவந்த சிங்கப்பூர் சலூன் படம் 5 மடங்கு நஷ்டமாகி இருக்கிறது. ஓரளவுக்கு விமர்சனங்களை பெற்று வந்தாலும் போட்ட பட்ஜெட்டை தொட முடியவில்லை.

Also read: அசோக் செல்வனை வீழ்த்திய ஆர்ஜே பாலாஜி.. சிங்கப்பூர் சலூன், ப்ளூ ஸ்டார் 4வது நாள் வசூல்

அதாவது இப்படம் எடுப்பதற்கு கிட்டத்தட்ட 23 கோடி செலவாயிருக்கிறது. இதில் ஹீரோவுக்கு 7கோடி சம்பளத்தை கொடுத்து மற்ற செலவுகளையும் பார்த்திருக்கிறார்கள். இப்படி இருக்கும் பட்சத்தில் இப்படம் வெளிவந்து இப்ப வரை 15 கோடி வசூலை கூட தாண்ட முடியவில்லை. ஆனால் இவர்களும் படம் வெற்றி பெற்று விட்டது என்று வெற்றி விழா கொண்டாட ஆரம்பித்து விட்டார்கள்.

இது என்னடா படம் வெளிவந்த கொஞ்ச நாளிலேயே சக்சஸ் ஆகிவிட்டது என்று ஆளுக்கு ஆள் வெற்றி விழா கொண்டாடுகிறார்கள். யாரை ஏமாற்றுவதற்கு இந்த சக்சஸ்மீட்டை நடத்தி படம் ஹிட் ஆயிட்டு என்று விளம்பரப்படுத்தி வருகிறார்கள். இதெல்லாம் செய்வதற்கு இன்னொரு காரணம், என்னவென்றால் இவர்கள் நடித்த படங்கள் வெற்றி ஆகிவிட்டது என்று சொன்னால் தான் அடுத்த படத்திற்கு சம்பளத்தை அதிகமாக கேட்க முடியும்.

அதனால் தான் இப்படி ஒரு டிராமாவை நடத்தி வருகிறார்கள் என்று பத்திரிகையாளர் பிஸ்மி இந்த இரண்டு படங்களை பற்றியும் புட்டு புட்டு வைத்து வருகிறார். உண்மையிலேயே படம் நல்லா இருந்தால் மக்கள் அந்த படத்தை தூக்கி கொண்டாடுவார்கள். உதாரணத்திற்கு லவ் டுடே, குட்நைட் போன்ற படங்கள் நிறைய வந்தது. இந்த படங்களுக்கு எல்லாம் எப்படி மக்கள் ஆதரவை கொடுத்து வரவேற்றார்களோ, அதுபோல நல்ல படம் இருந்தால் மக்கள் தானாகவே கொண்டாடுவார்கள். அதனால் தேவையில்லாமல் விளம்பரப்படுத்தி உங்களை நீங்களே அசிங்கப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று பத்திரிகையாளர் பிஸ்மி கூறியுள்ளார்.

Also read: கிரிக்கெட்டை வைத்து தீண்டாமை அரசியல் பேசிய பா ரஞ்சித்.. ப்ளூ ஸ்டார் ட்விட்டர் விமர்சனம்

Trending News