செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

விஜய்யின் அரசியல் வருகையால் தூக்கத்தை தொலைத்த 6 பெரிய புள்ளிகள்.. GOAT-க்கோ தண்ணி காட்டப் போகும் தளபதி

6 Celebrities fear Vijay’s political arrival: கடந்த வாரம் விஜய் தன்னுடைய கட்சியின் பெயர் ‘தமிழக வெற்றி கழகம்’ என்பதை அறிவித்து அரசியல் களத்தை பரபரப்பாக்கினார். இவருடைய அரசியல் வருகையால் ஆறு பெரிய புள்ளிகளின் தூக்கமே போச்சு. வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்களில் விஜய்யும் ஒருவர் என்பதால், அவரை எப்படி சமாளிப்பது என தெரியாமல் ஆளுங்கட்சியான திமுக திணறுகிறது.

என்ன தான் விஜய் கட்சி ஆரம்பித்ததும் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து சொன்னாலும், ஒரு பக்கம் அவருக்குள் பயமும் இருக்கு. அதேபோல் தான் நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான், ‘அதிக அளவில் இளைஞர்கள் நாம் தமிழர் கட்சி நோக்கி வந்து கொண்டிருக்கின்றனர். இதற்கு விஜய் தொடங்கிய தமிழக வெற்றி கழகம் தடையாக இருக்காது’ என்று பேட்டியளித்து தன்னை தானே சமாதானப்படுத்திக் கொண்டிருக்கிறார்.

இப்போதைக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு நேரம் சரியில்லை. அதிமுக கட்சியும் இரண்டாக பிளவுபட்டு இருக்கும் நேரம் பார்த்து விஜய்யும் அரசியலில் என்ட்ரி கொடுப்பது எடப்பாடிக்கு பீதியை கிளப்புகிறது. ‘மற்ற அரசியல் கட்சித் தலைவர்களை விட அதிகமாக உழைத்திருக்கிறேன். நான் தான் அடுத்த முதலமைச்சர்’ என சொல்லிக் கொண்டிருக்கும் சமத்துவ கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார், புதிதாக கட்சியை துவங்கிய விஜய்க்கு வாழ்த்து தெரிவித்தாலும் ஒரு பக்கம் அவருக்குள் பயமும் இருக்கிறது.

Also Read: விஜய் அண்ணன் கிளம்பியாச்சு காலியா இருக்கும் திண்ணை.. இடத்தை பிடித்த முண்டாசு கட்டிய 5 நடிகர்கள்

விஜய்யின் அரசியல் வருகையால் பயப்படும் 6 பிரபலங்கள்

அடுத்ததாக விஜய்யின் தவெக கட்சி, பாட்டாளி மக்கள் கட்சிக்கு கடும் போட்டியாக மாறிவிடுவாரோ என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸும் பதட்டத்துடன் இருக்கிறார். விஜய்யின் அரசியல் வருகையால் நிஜமாவே தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு தான் தூக்கம் போயிருச்சு. இவர் 2026ல் தமிழகத்தில் ஆட்சியை அமைப்பேன் என தொடர்ந்து மேடைகளில் பேசிக்கொண்டிருந்தார்.

ஆனால் இப்போது 2026ல் விஜய் அரசியல் களத்தில் நின்று, பல மேடைகளில் ஆட்டுக்குட்டி போல் கத்திக்கொண்டே இருந்த அண்ணாமலைக்கு தண்ணி காட்ட போகிறார். விஜய் இருக்கிற வேகத்தை பார்த்தால் தன்னுடைய கனவு கனவாகவே போயிடுமோ என்ற பயம் அண்ணாமலைக்கு வந்துவிட்டது. எப்படியாவது 2026ல் முதலமைச்சராக வேண்டும் என விஜய் உறுதியுடன் செயல்படுவது தான் இந்த ஆறு பிரபலங்களுக்கும் பயத்தையும் பதட்டத்தையும் அளிக்கிறது.

Also Read: 3 இயக்குனர்களிடம் இந்த ஒரு விஷயத்தை எதிர்பார்க்கும் விஜய்.. சொல்லி அடிக்க போகும் தளபதி 70

Trending News