திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

விஜய் அரசியலுக்கு வந்ததால் ஏற்பட்ட நஷ்டம்.. ஆட்டம் காணப்போகும் திரையுலகம்

Consequences of Actor Vijay becoming a politician: தமிழ் சினிமாவின் டாப் வசூல் நாயகனாக இருக்கக்கூடிய தளபதி விஜய், இப்போது ‘தி கோட்’ படத்தில் நடிக்கிறார். அடுத்து அவரது 69-வது படத்துடன் முழுமையாக அரசியலில் ஈடுபட பார்க்கிறார். இவர் அரசியலுக்கு சென்றால் சினிமா இண்டஸ்ட்ரிக்கு தான் பெரிய நஷ்டம் ஏற்படும்.

ஆறு மாசத்திற்கு ஒரு படம் என, செம ஸ்பீடா அடுத்தடுத்த படங்களில் நடித்துக் கொடுத்து, தொடர்ந்து ஹிட் கொடுக்கக் கூடியவர் தான் தளபதி விஜய். இரண்டு வருஷத்திற்கு நாலு படங்களில் நடித்தால் கூட 600 கோடிக்கு மேல் அவருக்கு சம்பளம் வரும். இப்போது அவர் அரசியலுக்குப் போனால் அவருக்கு தான் எப்படியும் ஹெவி லாஸ்.

இருந்தாலும் நடிப்பு சாம்ராஜ்யத்தை, நவரத்தின கிரீடத்தை கழட்டி வைத்துவிட்டு மக்கள் பணிக்காக ரியல் ஹீரோவாக போகிறார் விஜய். இதற்காக அவர் சினிமாவில் சம்பாதிக்கும் பல கோடிகளை தியாகம் செய்ய தயாராகிவிட்டார். இதனால் அவருக்கு மட்டும் இழப்பல்ல, அவர் அரசியலுக்கு போவது திரையரங்கு உரிமையாளர்களுக்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தப் போகிறது.

Also Read: அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த தளபதி.. ட்ரெய்லருக்கே விழி பிதுங்கும் பெரிய தலைகள்

விஜய் அரசியல்வாதியாக மாறுவதால் ஏற்படும் பின் விளைவுகள்

ஏனென்றால் திருப்பூர், மதுரை, கோயமுத்தூர், திருச்சி என எல்லா பக்கமும் விஜய் படத்தை போட்டு தான் லாபம் பார்க்கின்றனர். அவர் சினிமாவை விட்டு செல்வதால் திரையுலகம் தான் பெருத்த அடி வாங்கும். அதேசமயம் வருஷத்துக்கு 600 கோடியை அசால்டாக சம்பாதிக்கும் விஜய், அதையெல்லாம் பொருட்படுத்தாமல் மக்கள் பணியாற்றுவதற்காக  செல்வது பெரிய விஷயம் தான்.

அதுவும் வரும் 2026 ஆம் ஆண்டு, அவர் புதிதாக துவங்கிய தமிழக வெற்றி கழகம் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராகவும் போட்டியிட தயாராகிவிட்டார். இருந்தாலும் அவர் சினிமாவை விட்டுவிட்டு முழு அரசியல்வாதியாக மாறுவதால் திரையுலகம் தான் ஆட்டம் காண போகிறது.

Also Read: விஜய்யின் கடைசி படத்தை இயக்கப் போகும் இயக்குனர்.. மற்ற படங்களை ஓரங்கட்டி விட்டு தளபதிக்கு கொடுக்கும் முன்னுரிமை

Trending News