பல பெண்களுடன் தொடர்பு, சொத்துக்காக நடந்த கல்யாணம்.. டிவி நடிகர் செய்த பித்தலாட்டம்

பிரபல சேனலின் மூலம் காமெடி பீஸாக அறிமுகமான அந்த நடிகர் பின்பு ஹீரோ அவதாரம் எடுத்தார். ஒரு சில சீரியல்களில் நடித்து வந்த அவர் திடீரென மூத்த நடிகர் ஒருவரின் மகளை திருமணம் செய்து கொண்டு ஷாக் கொடுத்தார்.

இது சில சர்ச்சைகளை உருவாக்கிய நிலையில் தற்போது கிளம்பி இருக்கும் பிரச்சனை பூதாகரமாக வெடித்துள்ளது. ஏற்கனவே நடிகரை பற்றி தெரிந்த நட்பு வட்டாரங்கள் இந்த கல்யாணம் எத்தனை நாளைக்கு என வெளிப்படையாகவே சொல்லி வந்தனர்.

அதற்கேற்றார் போல் நடிகரின் மனைவியும் தற்போது கணவரை பற்றி அடுக்கடுக்காக புகாரை சொல்லி வருகிறார். அதில் முக்கியமானது சொத்துக்கு ஆசைப்பட்டு தான் டிவி நடிகர் இந்த திருமணத்தை நடத்தி இருக்கிறார் என்பதுதான்.

Also read: தயாரிப்பாளர் உடன் வெளிநாட்டு கச்சேரி நடத்திய இளம் நடிகை.. கையும் களவுமாக பிடித்து கும்மாங்குத்து குத்திய மனைவி

அதிலும் நடிகர் தன் மனதில் மன்மத ராசா என நினைத்துக் கொண்டு ஏகப்பட்ட பெண்களுக்கு வலை வீசிய கதையையும் மனைவி அவிழ்த்து விட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் சூடு பிடிக்க ஆரம்பித்துள்ள நிலையில் நடிகர் தரப்பிலிருந்து சில மிரட்டல்களும் பகிரங்கமாக வந்து கொண்டிருக்கிறதாம்.

ஆனாலும் நடிகரின் மனைவி பல ரகசியங்களை வெளியிட வாய்ப்பு இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் கசிந்துள்ளது. இதன் மூலம் நடிகரின் வண்டவாளம் வெளிச்சத்துக்கு வருவது மட்டுமல்லாமல் கேரியருக்கே ஆப்பு விழும் எனவும் பேசப்பட்டு வருகிறது.

Also read: பொட்டி பாம்பாய் அடங்கிய ஹீரோ.. காரியத்தை சாதித்துக் கொண்ட மனைவி