துணிச்சலான கதையில் கயல் ஆனந்தி.. பதப்பதைக்க வைக்கும் மங்கை ட்ரெய்லர்

Kayal Ananthi’s Mangai Trailer : கயல் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் ஆனந்தி. அதன்பிறகு கயல் ஆனந்தி என்ற அடைமொழி உடனே சினிமாவில் பயணித்து வருகிறார். திருமணத்திற்குப் பிறகு சில படங்களில் நடித்து வந்த ஆனந்தி இப்போது மங்கை என்ற படத்தில் நடித்திருக்கிறார்.

குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில் ஜே எஸ் எம் பிக்சர்ஸ் தயாரிப்பில் மங்கை படம் உருவாகி இருக்கிறது. கயல் ஆனந்தி, ராம்ஸ், துஷி, ஆதித்யா கதிர் ஆகியோர் இந்த படத்தில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றிருந்தது.

அதாவது ஒரு ஆணின் பார்வையில் பெண் எப்படி பார்க்க படுகிறாள் என்பதை பற்றிய கதையில் மங்கை படம் உருவாகி இருக்கிறது. ஒரு துணிச்சலான பெண் நினைத்தால் எதையும் செய்ய முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக மங்கை படம் உருவாகி இருக்கிறது. மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்ற ஷிவினும் இந்த படத்தில் நடித்துள்ளார்.

ஒரு பெண் மீது தவறான குற்றம் எழும் போது அவள் எந்த எல்லைக்கும் செல்வாள் என்பதை கயல் ஆனந்தி இந்த படத்தில் தத்ரூபமாக காட்டி இருக்கிறார். பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கட்டாயம் பார்க்கும் படமாகத்தான் மங்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த படம் மார்ச் மாதம் ரிலீஸ் ஆக இருக்கிறது.

கண்டிப்பாக கயல் ஆனந்திக்கு கை கொடுக்கும் படமாக மங்கை இருக்கப் போகிறது. மேலும் இந்த ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து கயல் ஆனந்தி இது போன்ற துணிச்சலான கதையை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்று தங்களது விருப்பத்தை கூறி வருகின்றனர்.