சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கே எஸ் ரவிக்குமார் 5 ஹீரோக்களுக்கு கொடுத்த லைஃப் டைம் ஹிட் படங்கள்.. இன்று வரை கொண்டாடப்படும் நாட்டாமை

KS Ravikumar Movies: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் குடும்பப் பின்னணி கதை கலந்து மசாலா திரைப்படங்களை கொடுப்பதில் வல்லவர். ஒவ்வொரு ஹீரோக்களுக்கும் இவர் கொடுத்திருக்கும் ஹிட் படம் அவர்களுடைய சினிமா என்னும் கிரீடத்தில் பதிக்கப்பட்ட வைர கற்கள் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு இவருடைய படங்கள் வெற்றி பெற்றிருக்கிறது. முக்கியமான ஐந்து ஹீரோகளுக்கு கே எஸ் ரவிக்குமார் கொடுத்த லைஃப் டைம் ஹிட் படங்களை பற்றி பார்க்கலாம்.

இன்று வரை கொண்டாடப்படும் நாட்டாமை

சரத்குமார் – நாட்டாமை: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரத்குமார் நடித்த நாட்டாமை படம் இப்போது டிவியில் போட்டாலும் டிஆர்பி யில் உச்சம் தொட்டுவிடும். படத்தில் வரும் சென்டிமென்ட் காட்சிகளாக இருக்கட்டும், கவுண்டமணி மற்றும் செந்தில் அடித்த லூட்டிகளாக இருக்கட்டும் இன்று வரை தமிழ் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. நாட்டாமை தீர்ப்ப மாத்தி சொல்லு, டேய் தகப்பா மை சன், ஊரை விட்டு ஒதுக்கி வைக்கிறேன் போன்ற இந்த படத்தின் வசனங்கள் 2K கிட்ஸ் வரை பிரபலம்.

ரஜினி – படையப்பா: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு படையப்பா படம் அவருடைய சினிமா வாழ்க்கையில் ஒரு மிகப்பெரிய மைல் கல் என்று சொல்லலாம். நீலாம்பரி கேரக்டர், ரஜினிக்கு அப்பாவாக சிவாஜி நடித்தது, ரஜினியின் அரசியல் களத்திற்கு ஹைப் ஏற்றும் வகையில் படத்தின் வசனங்கள் அமைந்தது எல்லாமே இந்த படத்திற்கு மிகப்பெரிய பிளஸ் ஆக இருந்தது. இப்போது டிவியில் இந்த படத்தை பார்த்தாலும் புதிதாக பார்க்கும் அளவுக்கு உற்சாகத்தை கொடுக்கக்கூடிய ஹிட் படம் இது.

Also Read: விவாகரத்திற்கு பிறகும் திருமணம் செய்து கொள்ளாத 6 பிரபலங்கள்.. காதலியின் நினைவுடனே வாழும் காதல் கிறுக்கன்

பிரபு – பெரிய குடும்பம்: 5 வயசுல அண்ணன் தம்பி, பத்து வயசுல பங்காளி என ஒரு பழமொழி சொல்லுவார்கள். அதை மையமாக கொண்டு கே எஸ் ரவிக்குமார் இயக்கிய படம் தான் பெரிய குடும்பம். பிரபு, கனகா, வினிதா, விஜயகுமார், லட்சுமி, வாகை சந்திரசேகர், சித்ரா, கவுண்டமணி, செந்தில், விசித்திரா என மிகப் பெரிய நட்சத்திர பட்டாள்களோடு இந்த படம் உருவானது. நடிகர் பிரபுவுக்கு இது ஒரு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.

கார்த்திக் – பிஸ்தா: இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில், கார்த்திக் நடிப்பில் 1997 ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய ஹிட் அடித்த படம் தான் பிஸ்தா. வழக்கமாக நடிகர் கார்த்திக்குக்கு கவுண்டமணி உடன் நகைச்சுவை காட்சிகள் செட் ஆகும். இந்த படத்தில் கார்த்திக், மணிவண்ணனுடன் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகளும் மிகப்பெரிய அளவில் கை கொடுத்தது. கார்த்திக்கின் வெற்றி பாதையில் பிஸ்தா ரொம்பவும் முக்கியமான படம்.

விஜயகாந்த் – தர்மசக்கரம்: இயக்குனர் ஏ எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் நடித்த படம் தான் தர்மசக்கரம். இந்த படத்தில் அவருடன் இணைந்து ரம்பா, மணிவண்ணன், ஆர் சுந்தர்ராஜன், செந்தில், பொன்னம்பலம் ஆகியோர் இணைந்து நடித்திருந்தனர். முழுக்க முழுக்க கிராமத்து பின்னணி கதை கொண்ட இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

Also Read: ஓவர் நைட்டில் ஒபாமா ஆன 5 காமெடியன்கள்.. ராஜ வாழ்க்கை வாழும் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்

Trending News