Lal Salaam First Day Collection : ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கிட்டத்தட்ட ஒன்பது வருடங்களுக்குப் பிறகு மீண்டும் சினிமாவில் இயக்குனராக என்ட்ரி கொடுத்த படம் தான் லால் சலாம். தனுஷின் 3 மற்றும் கௌதம் கார்த்திக்கின் வை ராஜா வை போன்ற படங்களை ஐஸ்வர்யா இயக்கியிருந்தார். இந்த படங்கள் எதிர்பார்த்த அளவு வசூலை பெறவில்லை.
இந்த சூழலில் தனது அப்பா ரஜினியை நம்பி ஐஸ்வர்யா இறங்கிய படம் தான் லால் சலாம். விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக இந்த படத்தில் நடித்துள்ள நிலையில் நீண்ட நேர சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்திருந்தார். முதல் பாதியில் ரஜினியின் மாஸ் என்ட்ரி தியேட்டரையே அலற செய்திருந்தது.
அதோடு மட்டுமல்லாமல் இரண்டாம் பாதியில் படம் முழுக்க ரஜினியின் காட்சிகள் இடம் பெற்றிருந்தது. கிரிக்கெட்டை வைத்து ஏற்படும் மத கலவரம் தான் படத்தின் மையக் கருத்தாக உள்ளது. இந்நிலையில் நேற்று வெளியான லால் சலாம் படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
வசூலை வாரிக் குவிக்கும் லால் சலாம்
இந்நிலையில் லைக்கா நிறுவனம் இந்த படத்தை 50 கோடி பட்ஜெட்டில் தயாரித்திருந்தது. முதல் நாளிலேயே அள்ள அள்ள குறையாத அளவுக்கு லால் சலாம் படம் வசூல் செய்திருக்கிறது. அதாவது 4.3 கோடி முதல் நாளில் லால் சலாம் படம் வசூலை வாரி குவித்து இருக்கிறது.
அதோடு இன்று மற்றும் நாளை சனி, ஞாயிறு விடுமுறை நாட்கள் என்பதால் கண்டிப்பாக வசூல் பல மடங்கு அதிகரிக்க வாய்ப்பு இருக்கிறது. மேலும் லால் சலாம் படத்திற்கு போட்டியாக வெளியான மணிகண்டனின் லவ்வர் படமும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.