5 comedians in tamil cinema act emotional scenes and lock fans emotionally: நகைச்சுவை நடிகர்கள் எளிமையான வசனங்களாலும் உடல் மொழிகளாலும் நகைச்சுவையை ஏற்படுத்தி மக்களை மகிழ்வித்து நீங்கா நினைவை ஏற்படுத்தி இருந்த போதும் சில காமெடி நடிகர்கள் தான் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் வாயிலாக மக்களை சிந்திக்க வைப்பதுடன் அழ வைக்கவும் செய்து விடுகிறார்கள் அவ்வாறு நடித்த நடிகர்களின் 5 படங்கள்.
வடிவேலு: முரளி, மீனா, வடிவேலு நடித்த பொற்காலம் திரைப்படத்தில் முதலில் நகைச்சுவையில் கலக்கியவர் இறுதியில் மாற்றுத்திறனாளியான முரளியின் தங்கையை கரம் பிடிப்பதாக வாக்குறுதி கொடுத்து “ஊனம் என்பது மனசுக்கு தான்! உள்ளம் நல்லா இருந்தா ஊனா ஒன்னும் குறை இல்ல” என்ற பாடலின் மூலம் பார்வையாளர்களின் கண்களில் கண்ணீரை வரவழைத்து இருந்தார் வடிவேலு.
தம்பி ராமையா: விதார்த், அமலாபால் நடித்த மைனா திரைப்படத்தில் நடித்த காமெடி நடிகர் தம்பி ராமையா காவல் அதிகாரி வேடத்தில் வெறுப்பை சம்பாதித்து இடைவேளைக்கு பின் நாயகனுடன் நெருங்கி பழகி இறுதிக் காட்சியில் நாயகன் இறக்கும்போது பிரிவை தாங்காமல் அவர் அழுததோடு ரசிகர்களையும் அழ வைத்தார்.
Also read: 300 படங்கள் நடித்த போண்டாமணி சேர்த்து வைத்த சொத்து.. திரும்பி கூட பார்க்காத வடிவேலு
சார்லி: சேரன் இயக்கத்தில் பார்த்திபன், முரளி மற்றும் சார்லி நடித்த திரைப்படம் வெற்றிக்கொடி கட்டு. வேலைவாய்ப்பின்மை காரணமாக வெளிநாட்டுக்கு அழைத்துச் சென்று வேலை வாங்கி தருவதாக கூறி பணத்தை ஏமாற்றும் கும்பலிடம் மாட்டிக் கொண்ட இளைஞர்களில் ஒருவராக நடித்த சார்லி மனநிலை சரியில்லாதவர் போல் மாறி தனது துல்லியமான நடிப்பால் ரசிகர்கள் அனைவரையும் கண்கலங்க வைத்தார்.
எம்எஸ் பாஸ்கர்: காமெடியில் பல படங்களில் கலக்கிக் கொண்டிருந்த எம்எஸ் பாஸ்கர் சிறந்த குணச்சித்திர நடிகரும் ஆவார். இவர் நடித்த எட்டு தோட்டாக்களில் சூழ்நிலை கைதியாக மாட்டிய எம்எஸ் பாஸ்கர் அவரது சோக கதையை உணர்ச்சியுடன் கூறும் விதத்தில் நம்மையும் அறியாமல் கண்களில் கண்ணீர் வெளிப்பட்டது எனலாம். எம் எஸ் பாஸ்கரின் நடிப்பால் படம் பார்த்து முடித்த அனைவரும் கனத்த இதயத்துடன் திரும்பி இருந்தனர்.
விவேக்: சமூக கருத்தை தன் படங்களில் கையாளும் சின்ன கலைவாணர் விவேக் அவர்கள் நடித்த திரைப்படம் வெள்ளை பூக்கள். விவேக், சார்லி நடித்த இத்திரைப்படத்தில் அமெரிக்காவில் நடக்கும் கொலை மற்றும் குற்றத்தை ஆராயும் ஓய்வு பெற்ற காவல் அதிகாரியாக விவேக், விவேகத்துடன் வெளுத்து வாங்கி இருந்தார். தன் மகனை காணாது அவரின் தவிப்பும் வெறுத்திருந்த மருமகளை ஏற்றுக் கொண்ட பக்குவத்திலும் கண்கலங்க வைத்தார் விவேக்.
Also read: வடிவேலு போல் விவேக்கிற்கு நச்சுன்னு அமைந்த 6 வசனங்கள்.. தோத்தாலும் ஜெயிச்சாலும் மீசைய முறுக்கு