வெள்ளிக்கிழமை, நவம்பர் 22, 2024

பெண்கள் கதையை வைத்து மாஸ் காட்டிய 5 படங்கள்.. நயன்தாராவுக்கு முன்னரே கொடி கட்டி பறந்த ஹீரோயின்

Actress Nayanthara: சினிமா வியாபாரம் என்பது முழுக்க முழுக்க ஹீரோக்களின் கைகளில் தான் இருக்கிறது என்பதை மொத்தமாக மாற்றி விட்டது இப்போதைய சினிமா. கதாநாயகியை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தெரிவித்தது தான் இந்த மாய பிம்பம் உடைந்ததற்கான காரணம். அப்படி பெண்களை மையமாக வைத்து மாஸ் காட்டிய ஐந்து படங்களை பற்றி பார்க்கலாம்.

36 வயதினிலே: 36 வயதினிலே படம் ஜோதிகாவின் கம் பேக் படம். அதையும் தாண்டி இந்த படம் பெரிய அளவில் ஹிட் அடித்ததற்கு காரணம் படத்தின் திரைக்கதை. திருமணமாகி, ஒரு குறிப்பிட்ட வயதை தாண்டிய பெண் தன்னுடைய சாதாரண வாழ்க்கையை கூட வாழ்வதற்கு எந்த அளவுக்கு போராடுகிறார், தனக்கு பிடித்ததை செய்ய முடியாமல் எப்படி எல்லாம் தவிக்கிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. இது மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது.

ராட்சசி: ராட்சசி படத்தில் வரும் கீதாராணி கேரக்டரை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறந்து விட முடியாது. இப்படி ஒரு ஆசிரியர் ஒவ்வொரு அரசு பள்ளிகள் கிடைத்தாலே அந்தப் பள்ளி மாணவர்கள் முன்னேறி விடுவார்கள் என்பதற்கு உதாரணம் தான் இந்த படம். ராட்சசி படம் ஜோதிகாவின் சினிமா கேரியரில் முக்கியமான ஒன்றாக இருந்ததோடு மட்டுமல்லாமல், பெரிய அளவில் வெற்றியையும் கொடுத்தது.

Also Read: சாய் பல்லவிக்கு பின் நடனத்தில் ஆட்டி படைக்க போகும் ஹீரோயின்.. இப்பவே சூர்யா துண்டு போடும் பெண் பிரபு தேவி

இறுதிச்சுற்று: தற்போதைய தமிழ் சினிமாவில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான மிகப்பெரிய ஹிட் படம் தான் இறுதிச்சுற்று. சாதாரண பகுதியில் வசிக்கும் பெண், குத்துச்சண்டை போட்டியில் எப்படி வெற்றி பெறுகிறார் என்ற கதையை மையமாக வைத்து வெளியான இந்த படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது.

அருவி: இயக்குனர் அருண் பிரபு மற்றும் அதிதி பாலன் இருவருக்குமே அருவி படம் அறிமுக படம்தான். ஆனால் தமிழ் சினிமாவின் தரமான படங்களின் லிஸ்டில் எப்போதுமே இந்த படத்திற்கு இடம் உண்டு. சமூகத்தால் பெரிய வேதனையை அடையும் பெண், அந்த சமூகத்திற்கு எதிராக எப்படி திரும்புகிறார் என்பதுதான் இந்த படத்தின் கதை. எந்த பரீட்சையமான நடிகர்களும் இல்லாத இந்த படம் இன்று வரை சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது.

அறம்: நடிகை நயன்தாராவின் சினிமா கேரியரில் அறம் படம் மிகவும் முக்கியமான ஒரு படம் ஆகும். நயன்தாரா இந்த படத்தில் ஐஏஎஸ் ஆபீஸராக நடித்திருப்பார். இந்த படம் தமிழ் சினிமா ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றதற்கு முக்கிய காரணம் ஆழ்துளை கிணற்றில் குழந்தைகள் விழுந்து மரணிக்கும் செய்தியை பற்றி பேசியது தான். அறம் படம் நேர்மறை விமர்சனங்களை பெற்றதோடு வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை பெற்றது.

நயன்தாராவுக்கு முன்னரே கொடி கட்டி பறந்த ஹீரோயின்

கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் காரப்பொறி முதலில் நடிக்க ஆரம்பித்தது நயன்தாரா தான் என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. ஆனால் உண்மையாக கதாநாயகிகளை முன்னெடுக்கும் படங்களில் தான் நடிக்க வேண்டும் என முதலில் பிள்ளையார் சுழி போட்டது நடிகை ஜோதிகா தான். சந்திரமுகி, மொழி போன்ற படங்கள் எல்லாம் ஜோதிகாவை மையப்படுத்தி வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தவைதான். திருமணத்திற்கு பின்னரும் ஜோதிகா அதையே தான் பின்பற்றி வருகிறார்.

Also Read: அப்போ வானதி இல்லையா.? சமந்தா, நாக சைதன்யாவுக்கு விரைவில் திருமணம்

- Advertisement -spot_img

Trending News