சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் கதாபாத்திரம்.. மீண்டும் நெகட்டிவ் கேரக்டரில் சூப்பர் ஸ்டார்

Actor Rajinikanth : சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு இப்போது சினிமாவில் தொடர்ந்து வெற்றி முகம் தான் இருந்து வருகிறது. அண்ணாத்த படம் கலவையான விமர்சனங்களை பெற்ற நிலையில் ஜெயிலர் படம் மாபெரும் வெற்றிக்கு பிறகு இப்போது லால் சலாம் படமும் வெற்றியை சந்தித்திருக்கிறது.

இதைத்தொடர்ந்து இப்போது வேட்டையன் படத்தில் ரஜினி நடித்து வருகிறார். டிஜே ஞானவேல் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தை பிரம்மாண்ட பொருட்செலவில் லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. வேட்டையன் படத்தின் படப்பிடிப்பு இன்னும் இரண்டு மூன்று வாரங்களில் நிறைவு பெற இருக்கிறதாம்.

மேலும் இப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தை தொடர்ந்து பிப்ரவரி 22 வரை நடக்க இருக்கிறது. இப்படம் முழுக்க முழுக்க ரஜினி ஸ்டைலில் தான் ஞானவேல் இயக்கி வருகிறார். எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் வகையில் விரைவில் ரஜினி நெகட்டிவ் கதாபத்திரத்தில் நடிக்க இருக்கிறார்.

Also Read : த்ரிஷாவை தொடர்ந்து ரஜினி ஹீரோயினையும் கொச்சைப்படுத்திய மன்சூர்.. கொந்தளிப்புடன் பேசிய வில்லன்

கமல் ஆளவந்தான், விஜய் அழகிய தமிழ்மகன், அஜித் மங்காத்தா என ஹீரோக்கள் நெகட்டிவ் கதாபாத்திரங்களில் நிறைய படங்களில் நடித்திருக்கின்றனர். அந்தவகையில் எந்திரன் படத்தில் சிட்டி கதாபாத்திரம் ரஜினியை வேறு தரத்திற்கு எடுத்துச் சென்றது. இப்போது லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள படத்திலும் ரஜினி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தான் நடிக்க இருக்கிறாராம்.

அதுவும் எந்திரன் சிட்டிக்கு டஃப் கொடுக்கும் வகையில் ரஜினி நடிக்க இருக்கிறாராம். ஏப்ரல் மாதத்தில் கடைசி வாரத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. மேலும் லோகேஷ் மற்றும் ரஜினி கூட்டணி என்பதால் ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

Also Read : ரஜினியின் மாபெரும் ஹிட் படத்தில் வாய்ப்பு கேட்ட விஜய்.. உள்ளே புகுந்து பஞ்சாயத்து பண்ணிய கமல்

Trending News