புதன்கிழமை, ஜனவரி 15, 2025

கண்ணும் கண்ணும் பேசி ரொமான்டிக்கை தெறிக்கவிட்ட விஜய் அஜித்தின் 5 படங்கள்.. ரெண்டு பேரும் வளர்வதற்கு காரணமான காதல்

Vijay and Ajith romantic 5 movies: எந்த மாதிரி படம் வந்தாலும் காதல், ரொமான்டிக் படங்கள் என்றாலே அதற்கு ஒரு தனிசுகம் உண்டு. ஆனால் இப்பொழுது வருகிற படங்கள் முக்கால்வாசி சண்டை, வன்முறை, கொலை போன்ற விஷயங்கள்தான் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த படங்கள் எல்லாம் ஒரு முறை வேண்டுமென்றால் பார்க்கலாம். ஆனால் காதல் படங்கள் என்றால் நினைக்கும் பொழுதெல்லாம் பார்க்கத் தோன்றும். அப்படி விஜய் மற்றும் அஜித் நடித்து காதல் காவியமாக வெற்றி பெற்ற படங்களை பார்க்கலாம்.

காதல் கோட்டை: அகத்தியன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு அஜித், தேவயானி, ஹீரா மற்றும் பலர் நடிப்பில் காதல் கோட்டை திரைப்படம் வெளிவந்தது. பார்த்தால் தான் காதலா, மனசுக்கு பிடிச்சவங்களுடன் பேசிக் கொண்டாலே ஒரு தனி சுகம் தான் என்பதற்கு ஏற்ற மாதிரி வித்தியாசமான உணர்வை ஏற்படுத்திய படம். முக்கியமாக அந்த காலத்தில் உள்ள காதலில், கடிதம், தபால்காரன் வருகை மற்றும் காத்திருப்பு இது அனைத்துமே ஒருவித உணர்வை ஏற்படுத்திருக்கும். “கண்ணும் கண்ணும் போதுமம்மா நெஞ்சம் மட்டும் பேசுமம்மா காதல்” என்ற வரிகள் உடன் உருகி உருகி காதலித்து இருப்பார்கள்.

காதல் மன்னன்: சரண் இயக்கத்தில் 1998 ஆம் ஆண்டு அஜித் மற்றும் மானு நடிப்பில் காதல் மன்னன் திரைப்படம் வெளிவந்தது. இப்படம் எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காது. அதிலும் ” நீ நெருப்பு என்று தெரிந்த பின்பும் உன்னை தொட துணிந்தேன் என்ன துணிச்சல் அடி, மணமகளாய் உன்னை பார்த்த பின்பும் உன்னை சிறை எடுக்க மனம் துடிக்குதடி” என்று சொல்வதற்கு ஏற்ப மானுவை பார்த்த உடனேயே ஒரு காதல் உணர்வை ஏற்படுத்தியது. நிச்சயதார்த்தம் ஆனபோதிலும் காதல் உண்மையாக இருந்தால் வெற்றி பெறும் என்று நடிப்பால் உணர்த்திக் காட்டியது காதல் மன்னன் அஜித்.

Also read: 1000 கோடி வசூலுக்கு தயாராகும் அஜித் பட இயக்குனர்.. ராமாயணத்திற்கு சவால் விடப் போகும் மகாபாரதம்

காதலுக்கு மரியாதை: ஃபாசில் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு விஜய் மற்றும் ஷாலினி நடிப்பில் காதலுக்கு மரியாதை திரைப்படம் வெளிவந்தது. இப்படம் காதல் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து தமிழ் சினிமாவில் இப்படி ஒரு கிளைமாக்ஸ் படம் மிகப்பெரிய மகிழ்ச்சி கொடுத்திருக்கிறது என்று சொல்லும் அளவிற்கு சூப்பர் ஹிட் படமாக வெற்றி பெற்றது. அதிலும் உண்மையான காதல், ஜாதி மத பேதங்கள் அனைத்தையும் கடந்து ஒன்று சேர்வது ஒரு பொக்கிஷம் என்பதை உணர்வுபூர்வமாக காட்டப்பட்டிருக்கும்.

துள்ளாத மனமும் துள்ளும்: எழில் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு விஜய் மற்றும் சிம்ரன் நடிப்பில் துள்ளாத மனமும் துள்ளும் திரைப்படம் வெளிவந்தது. இன்னும் நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த மாதிரி ஒரு கதையும் பாடல்களின் சுவடும் என்றுமே மறையாது என்பதற்கு ஏற்ப ஒரு காதல் காவியமாக அனைவரும் மனதிலும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை பார்க்கும் பொழுது கண்ணீரில் இருந்து ஆனந்த கண்ணீர் வரும் அளவிற்கு ஒரு பொக்கிஷமான உணர்வை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.

குஷி: எஸ்ஜே சூர்யா இயக்கத்தில் 2000 ஆண்டு விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் குஷி திரைப்படம் வெளிவந்தது. அசைக்க முடியாத காதலையும், அளவுகடந்த நம்பிக்கையும் வைத்திருந்தால் காதலில் வெற்றி நிச்சயம் என்பதற்கு ஏற்ப இப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி பாஸிட்டிவாக அமைந்திருக்கும். இப்படி விஜய் மற்றும் அஜித் ஆரம்ப கட்டத்தில் காதல் படங்களில் ரொமான்டிக்காக நடித்தது மூலம் தற்போது முன்னணி ஹீரோவாக வளர்ந்து வெற்றி அடைந்திருக்கிறார்கள்.

Also read: ஒரே படத்தில் 43 விருதுகள் வென்ற வாரிசு! சாகச பயணத்தில் வாழ்க்கையை முடித்துக் கொண்ட அஜித்தின் உயிர் நண்பர்

Trending News