ஒரே படத்தில் அறிமுகமாகி சண்டைக்கோழியாக மாறிய நடிகர்கள்.. அட்வைஸ் பண்ணி சேர்த்து வைத்த மொகைதீன் பாய்

Mohaidin Bhai gave advice: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் ரஜினி மொகைதீன் பாய் கேரக்டரில் வெளிவந்த படம் லால் சலாம். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த், செந்தில், தம்பி ராமையா மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். விளையாட்டை வைத்து நடக்கும் அரசியலை கதையாக வைத்து எடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் விஷ்ணு விஷால், லால் சலாம் படத்தின் பிரமோஷனில் பேசிய பொழுது ஒரு விஷயத்தை பகிர்ந்து இருக்கிறார்.

அதாவது விஷ்ணு விஷாலுக்கும், நடிகர் சூரிக்கும் ஏற்பட்ட பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைத்திருக்கிறது. இரண்டு பேருமே சினிமாவில் அறிமுகமானது வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான். இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கி இருக்கிறார். அத்துடன் இப்படம் எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் வெளி வந்ததால் படத்திற்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்தது.

முக்கியமாக புரோட்டாவை சாப்பிட்டு ரொம்பவே பேமஸ் ஆனதால் புரோட்டா சூரி, காமெடி நடிகராக வலம் வந்தார். இதனை தொடர்ந்து பல படங்களில் நகைச்சுவை நடிகராகவும், தற்போது கதைக்கான கதாபாத்திரங்களை எடுத்து ஹீரோவாகவும் பயணத்தை தொடங்கி விட்டார். அதே மாதிரி விஷ்ணு விஷாலுக்கும் வெண்ணிலா கபடி குழு ஒரு ஹீரோவுக்கான அந்தஸ்தை பெற்றுக் கொடுத்தது.\

Also read விஷ்ணு விஷால் விவாகரத்திற்கு காரணம் இவர்தானாம்.. முதல் முறையாக வெளியான ரகசியம்

அந்த வகையில் இவர்களுடைய காம்பினேஷனில் வெளிவந்த குள்ளநரி கூட்டம், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் போன்ற படங்கள் அனைத்தும் மக்களிடம் பெரிய அளவில் பேசப்பட்டது. இந்நிலையில் இவர்கள் காம்போவில் உருவான வீரதீர சூரன் படத்திற்காக சூரிக்கு 40 லட்ச ரூபாய் சம்பளமாக பேசப்பட்டது. அந்த நேரத்தில் விஷ்ணு விஷாலின் அப்பா ரமேஷ் மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜனும், சூரியிடம் சம்பளத்திற்கு பதிலாக சிறுசேரியில் நிலம் வாங்கித் தருகிறேன் என்று கூறி இருக்கிறார்.

அத்துடன் இன்னும் அதிகமாக 2.70 கோடி பணத்தையும் சூரியிடமிருந்து வாங்கி உள்ளார். ஆனால் அதன்பிறகு எந்த வித பதிலும் சொல்லாததால், சூரி பண மோசடி செய்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டு வைத்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த ஒரு விஷயத்தால் சூரிக்கும் நடிகர் விஷ்ணு விஷாலுக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு இருக்கிறது. அந்த வகையில் கிட்டத்தட்ட 4 ஆண்டுகளாக பிரிந்து இருக்கிறார்கள்.

ஆனால் தற்போது விஷ்ணு விஷால் பேசியது என்னவென்றால் எனக்கும் சூரிக்கும் இருந்த பிரச்சனைக்கு முடிவு கட்டியாச்சு. எங்களுக்கு இடையில் மூன்றாவது நபர் உள்ளே நுழைந்ததால் தான் அனைத்து பிரச்சினைக்கும் காரணம். இப்பொழுது எங்களுடைய நட்பு மீண்டும் மலர ஆரம்பித்து விட்டது. இதனை தொடர்ந்து எங்களுடைய காம்போவில் இனி அடுத்தடுத்து படங்கள் வரும் என்று கூறியிருக்கிறார். அத்துடன் இவருடைய மாற்றத்திற்கு லால் சலாம் படத்தில் நடிக்கும் பொழுது ரஜினி அவருக்கு கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என்று கூறியிருக்கிறார்.

Also read: எல்லா பக்கமும் பகையை வளர்த்துக் கொள்ளும் விஷால்.. விக்ராந்த், விஷ்ணு விஷால் கூட இப்படி ஒரு மோதலா?