வெற்றி துரைசாமி ஹிமாச்சலுக்கு சென்றது இதுக்கு தான்.. வலியோடு காரணத்தைச் சொன்ன வெற்றி மாறன்

Vetrimaaran- Vetri Duraisamy: சென்னை முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமியின் மரணம் கடும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினர் ஒரு பக்கம் வெற்றியின் இழப்பை தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கும் நண்பர்கள் ஒரு பக்கம் என அனைவரும் வேதனையின் உச்சியில் இருந்து வருகின்றனர்.

இதில் அஜித் தன் மனைவி ஷாலினியுடன் சைதை துரைசாமி வீட்டிற்கு சென்று அஞ்சலி செலுத்தினார். அதை தொடர்ந்து வெற்றியின் மிக நெருங்கிய நண்பரான இயக்குனர் வெற்றிமாறன் தன்னுடைய IIFC நிறுவனத்தின் சார்பாக இரங்கல் கூட்டம் நடத்தி இருந்தார்.

அப்போது பேசிய அவர், வெற்றி துரைசாமி எதற்காக இமாச்சலுக்கு சென்றார் என்ற காரணத்தை மிகுந்த வேதனையும் வலியுமாக தெரிவித்துள்ளார். எனக்கும் வெற்றிக்கும் நிறைய விஷயத்தில் ஒத்து போகும். இயற்கையை நேசிக்கும் அவருக்கு நிறைய தேடல்கள் இருந்தது.

ஒரு வைல்ட் லைஃப் போட்டோகிராபராக பல விருதுகளை அவர் வாங்கி இருக்கிறார். அந்த வகையில் கடந்த வருடம் ஆப்பிரிக்காவில் கொரில்லா குடும்பத்தை போட்டோ எடுத்த அவர் பனிக்கரடிகளையும் போட்டோ எடுத்திருக்கிறார். இப்படி அரிய விஷயங்களில் தீவிரம் காட்டி வந்த அவர் பனி சிறுத்தையை போட்டோ எடுப்பதற்காகத்தான் ஹிமாச்சலுக்கு சென்றார்.

ஆனால் எதிர்பாராத விதமாக அவர் உயிர் நீத்து விட்டார். என்னுடைய வாழ்க்கையில் நடந்த பல விஷயங்களில் அவருடைய பங்கு இருக்கிறது. எப்போதுமே சிரித்த முகத்துடன் அனைவரிடமும் அன்பாக பழகும் அவர் இப்போது நம்மிடம் இல்லை. காலம் இப்படி ஒரு கடினமான சூழலை நமக்கு கொடுத்திருக்கிறது

சிலரின் இழப்புதான் நம்மிடம் இருந்து எதையோ எடுத்துச் சென்ற உணர்வை கொடுக்கும். அப்படித்தான் இருக்கிறது வெற்றியின் மறைவு என வெற்றிமாறன் வருத்தத்துடன் பேசி இருக்கிறார். இயற்கை மீது தீரா காதல் கொண்ட இவரை இயற்கைத்தாய் இவ்வளவு சீக்கிரம் அழைத்துக் கொண்டிருக்க வேண்டாம்.