அஜித் நெருக்கம் காட்டிய 4 பிரபலங்கள்.. கிளம்புங்கன்னு சொல்லியும் சுடுகாடு வரை போய் சேட்டுக்கு செஞ்ச இறுதி மரியாதை

4 celebrities who showed closeness to Ajith: அஜித் என்ன தான் முன்னணி ஹீரோவாக ஜொலித்தாலும், மற்ற நடிகர்கள் மாதிரி ஓவராக பந்தா காட்டி பப்ளிசிட்டி பண்ண வேண்டும் என்று விரும்ப மாட்டார். இருக்கும் இடம் தெரியாமல், தான் உண்டு தன் வேலை உண்டு என்று நடிப்பதில் மட்டும் கவனம் செலுத்தி வருவார்.

அப்படிப்பட்டவர் சினிமாவில் இருக்கும் பிரபலங்களுடன் பெருசாக நெருங்கி பழகி நட்பு ரீதியாக எந்த பழக்கத்தையும் வைத்துக் கொள்ள மாட்டார். ஆனால் அதையும் தாண்டி சில பிரபலங்களிடம் நெருக்கமான பழக்கத்தை ஏற்படுத்தி நட்பு ரீதியாக பேசி வருகிறார். அவர்கள் யார் என்பதை பற்றி தற்போது பார்க்கலாம்.

விஜய் சங்கர்: இவர் யார் என்றால் எம்ஜிஆர், சிவாஜி காலங்களில் ஹீரோவாகவும், வில்லனாகவும், குணச்சித்திர நடிகராகவும் நடித்த ஜெய்சங்கரனின் மகன் விஜய் சங்கர். இவர் பெருசாக சினிமாவில் ஆர்வம் காட்டாமல் அப்பா ஆசைப்படி கண் மருத்துவராக படிப்பை முடித்து கஷ்டப்படும் குடும்பங்களுக்கும், கண் பிரச்சனையால் அவதிப்படும் மக்களுக்கும் உதவிக்கரம் நீட்டி வருகிறார். அப்படிப்பட்ட இவருடன் அஜித் நண்பராக பழகி வருகிறார். எப்பொழுதெல்லாம் அஜித்துக்கு சூட்டிங் இல்லையோ, அப்பொழுது இவரிடம் தான் பேசி நேரத்தை செலவழிப்பார்.

வெற்றி துரைசாமி: முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் வெற்றி துரைசாமிக்கும், அஜித்துக்கும் கிட்டத்தட்ட 18 வருடங்களாக நட்பு ரீதியான பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர்கள் இருவருடைய ஐடியாவும், ஒன்று போல தான் இருக்குமாம். இன்னும் சொல்லப்போனால் இருவரும் சேர்ந்துதான் பைக் ரைடிங், போட்டோ எடுக்கிறது, மற்றும் ஏரோநாட்டிக்கல் விஷயமாக பேசுவது என்று அனைத்து விஷயங்களிலும் ஈடுபட்டு வருவார்களாம். அப்படி நண்பராக இருந்த வெற்றி துரைசாமி இறந்த பொழுது குடும்பத்திற்கு ஆறுதல் சொல்ல முதல் ஆளாக போயிருந்திருக்கிறார்.

ராஜ்கிரண்: இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான முரட்டு கதாநாயகனாக பல படங்களில் நடித்தவர் தான் ராஜ்கிரண். இவர் சமீப படங்களில் அப்பா கேரக்டரில் நடிக்கும் வாய்ப்பை பெற்று வருகிறார். அந்த வகையில் கிரீடம் படத்தில் அஜித்துக்கு அப்பாவாகவும் ராஜ்கிரண் நடித்திருக்கிறார். அந்த சமயத்தில் இருந்து இவர்களுக்குள் ஒரு நல்ல புரிதல் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே அஜித், தொடர்ந்து ராஜ்கிரனிடம் பேசி பழகி வருகிறார்.

இவர்களை தொடர்ந்து சவுகார்பேட் சேட்டு ஒருத்தரிடமும் நெருங்கி பழகி இருக்கிறார். அதாவது இவர்களுடைய பழக்கம் எப்படி என்றால் அஜித்திற்கு சினிமாவில் பணம் நெருக்கடி வரும்போதெல்லாம் ஏன் எதற்கு என்று காரணங்கள் கேட்காமல் உங்களுடைய பிரச்சனையை முடித்துக் கொள்ளுங்கள் என்று பணத்தை வாரி வாரி இறைக்கும் அளவிற்கு ஒரு நம்பிக்கையான நட்பு பழக்கம் இவர்களிடையே ஏற்பட்டிருக்கிறது.

அந்த நட்பு கடைசிவரை நீடித்ததால், இவருடைய மறைவிற்கு குடும்பத்தில் உள்ளவர்களுக்கு ஆறுதல் சொல்லியதோடு மட்டுமில்லாமல் கடைசிவரை இறுதி சடங்கு அனைத்தையும் முடித்து சுடுகாடு வரை சென்று வழி அனுப்பி வைத்திருக்கிறார். அந்த அளவிற்கு இவர்களிடையே நெருக்கம் இருந்திருக்கிறது.